பிளேபாயாக ரஜினி ஆட்டம் போட்ட அந்தப்புரத்து வீடு.. கங்காக்கு மட்டும் முழு சுதந்திரத்தை கொடுத்த சூப்பர் ஸ்டார்

The house where Rajini enjoyed as a playboy: ரஜினி தற்போது ஞானியாக போன இடத்தில் எல்லாம் ரசிகர்களுக்கு அறிவுரையை வாரி வழங்கி வருகிறார். அதற்கு காரணம் ஒரு காலத்தில் குடியும் கூத்துமாய் இருந்தது தான். அதிலும் குடிப்பழக்கத்தினால் எந்த அளவிற்கு அடிமையாகி ஆட்டம் போட்டேன் என்ற உண்மையை பல இடங்களில் போட்டு உடைத்திருக்கிறார்.

அந்த வகையில் அப்பொழுது பிளேபாயாக சுற்றித்திரிந்து இருக்கிறார். அதுவும் வாலிப வயதில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து பல இளைஞர்களும் ஃபாலோ பண்ணுவதற்கு இவரும் ஒரு காரணமாகத்தான் இருந்திருக்கிறார். இப்படி சொகுசு வாழ்க்கையில் வாலிப வயசை என்ஜாய் பண்ணுவதற்காகவே ஒரு அந்தப்புரத்து வீட்டை வைத்திருந்திருக்கிறார்.

அதாவது கேளம்பாக்கம் பக்கத்தில் பண்ணை வீட்டில் நீச்சல் குளத்தைக் கட்டி அதற்கு தகுந்தார் போல பல ஆடம்பர வசதிகளையும் வைத்து கிட்டத்தட்ட 40 ஏக்கரில் கட்டி இருக்கிறார். அங்கே தான் ரஜினி மாதம் ஒருமுறை ரிலாக்ஸ் பண்ணுவதற்கு போவாராம்.

ரஜினிக்கு மிக நெருக்கமான கங்கா

முக்கியமாக அங்கே போய்விட்டால் அவரை சுற்றி நடக்கும் பல விஷயங்களை மறந்து இயற்கையை ரசிக்கும்படி தனியாக போயி மூன்று நாட்களாகவது தங்கிவிட்டு தான் திரும்பி வருவாராம். முக்கியமாக அந்த அந்தப்புரத்து வீட்டில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயம் என்றால் அது கங்கா தான்.

இந்த கங்காக்கு மட்டும் தான் அந்த வீட்டில் முழு சுதந்திரத்தையும் கொடுத்து வைத்திருக்கிறார். அந்த கங்கா யார் என்றால் மிக உயரமான ஒரு நாய். இந்த நாயோட பெயர் கங்காதரன். ரஜினி இதை செல்லமாக கங்கா என்று தான் கூப்பிட்டு கொஞ்சுவார். இவரை தான் அந்த பண்ணை வீட்டின் ராஜா போல வளர்த்து வருகிறார்.

அந்த வகையில் எல்லா சுதந்திரத்தையும் கொடுத்து வீட்டின் பாதுகாப்பு பொறுப்பையும் முழுமையாக ஒப்படைத்து இருக்கிறார். இந்த கங்கா இருக்கும் தைரியத்தில் தான் ரஜினி தனியாக அங்க போயி இருந்துட்டு வருவார். அத்துடன் இன்னொரு நபருக்கும் அங்கே அனுமதி கொடுத்து வைத்திருக்கிறார்.

அவர் ரஜினியின் மிக நெருங்கிய நண்பரானவர். அவர் யார் என்றால் தெலுங்கு நடிகர் மோகன். அந்தக் காலத்தில் இவரும் ரஜினி தான் மிகப்பெரிய தோஸ்த். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் அந்தப் பண்ண வீட்டில் அதிக சேட்டைகளை செய்து ஆட்டம் போட்டு இருந்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போது ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கிப் போய்விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப இதையெல்லாம் மறந்து ஆன்மீகம், தியானம், உடற்பயிற்சி விஷயங்களை மன நிம்மதியை தேடி அலைந்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்