சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காதல் கோட்டை படத்தை தவறவிட்ட ஹீரோயின்.. தேவயானிக்கு அடித்த ஜாக்பாட்

Kadhal Kottai-Devayani: அஜித் மற்றும் தேவயானி ஆகியோர் நடிப்பில் மிகவும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் காதல் கோட்டை. பார்க்காமலே காதல் என்ற புதிய கதைகளத்தை இயக்குனர் படமாக எடுத்திருந்தார். மேலும் தேவயானியின் நடிப்பும் இந்த படத்தில் அட்டகாசமாக அமைந்திருந்தது. அவரின் கேரியருக்கு ஒரு மைல் கல்லாக இருந்தது.

ஆனால் காதல் கோட்டை படத்தின் வாய்ப்பு முதலில் தேவயானிக்கு வரவில்லையாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனக்கு தான் அந்த வாய்ப்பு வந்ததாக கூறி இருக்கிறார். அப்போது வேறு ஒரு படத்தை தேர்ந்தெடுத்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.

அதாவது மலையாள மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா மாதவன் நாயர். கமல் நடிப்பில் வெளியான மகாநதி படத்திலும் இவர் நடித்திருந்தார். விஜய் உடன் சில நடிகைகளின் காம்போ எப்போதுமே ரசிகர்களுக்கு பிடிக்கும். அவ்வாறு விஜய், சங்கீதா கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் தான் பூவே உனக்காக.

விக்ரமன் இயக்கத்தில் குடும்ப பங்கான கதை களத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு சங்கீதா சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். விஜயுடன் தான் நடித்த அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார்.

மேலும் பூவே உனக்காக மற்றும் காதல் கோட்டை படத்தின் வாய்ப்புகள் ஒன்றாக தான் சங்கீதாவுக்கு வந்ததாம். இப்போது எந்த படத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணிய போது விக்ரமின் கதை நன்றாக இருக்கும் என்று பூவே உனக்காக படத்தை தேர்ந்தெடுத்தாராம். இதனால் காதல் கோட்டை படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இரண்டு படங்களுமே அந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதோடு மட்டுமல்லாமல் இப்போது விஜய் படத்தை பார்க்கும்போது சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு முடியாது. அந்த அளவுக்கு விஜய்யை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். மேலும் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன் என்பது தனக்கு பெருமையான விஷயம் என சங்கீதா கூறியிருக்கிறார்.

- Advertisement -

Trending News