2022-இல் வில்லன்களாக ஜெயித்த டாப் 5 ஹீரோக்கள்.. ஆரம்பிக்கலாமா என கெத்து காட்டிய விக்ரம் ரோலக்ஸ்

தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றால் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரது முகம் தான் நம் முன் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த வருடம் 2022ல் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே வில்லன்களாக கலக்கியுள்ளனர். அதில் முக்கியமாக நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அளவிற்கு அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அப்படி 2022-ல் வில்லன்களை ஓரங்கட்டிய 5 ஹீரோக்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சூர்யா : நடிகர் சூர்யா இந்த வருடத்தில் ஹீரோவாக இயக்குனர் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இத்திரைப்படத்தை விட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கடைசி பத்து நிமிடத்தில் மட்டுமே தோன்றும் சூர்யா, ஒரே ஒரு வில்லத்தனமான சிரிப்பில் அனைத்து வில்லன்களையும் ஆச்சரியத்தில் பார்க்க வைத்தார்.

Also Read : வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி தன்னிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் : தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.அண்ணன் தம்பியாக வரும் தனுஷ், அண்ணன் தனுஷ் கதிர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். சைக்கோ கதாபாத்திரத்தில் தனுஷின் வித்தியாசமான நடிப்பு தனுஷின் கேரியருக்கு முக்கியமாக அமைந்துள்ளது.

Also Read : ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்

எஸ்.ஜே. சூர்யா : இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த இத்திரைப்படம் 65 கோடி வரை வசூலை அள்ளிய நிலையில், கண்டிப்பான கல்லூரி ப்ரோபஸ்சராக எஸ்.ஜே.சூர்யா வலம் வருவார். வில்லனாக படத்தின் ஆரம்பத்தில் நடித்தாலும், ஒரு நல்ல ஆசிரியராக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பை வெளிப்படுத்தியிப்பார்.

வினய் : நடிகர் வினய் கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் மாசான வில்லனாக நடித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தான் திரைப்படத்தில் சைலெண்டான வில்லனாக நடித்து இருப்பார். இத்திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தை விட வினய்யின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது

Also Read : ஹீரோவாக சாதிக்க முடியாமல் வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. தவிர்க்க முடியாத வில்லனாக மாறிய வினய்

Next Story

- Advertisement -