தக் லைஃப்பில் மீண்டும் இணைந்த ஹீரோக்கள்.. சிம்புக்கு கொடுக்கப்பட்டுள்ள வெயிட்டான கேரக்டர்

Simbu : மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது தக் லைஃப் படம். இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ வெளியான நிலையில் படப்பிடிப்பு தேர்தலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறது.

இதற்கான நடிகர் மற்றும் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வந்தது. அதன்படி கதாநாயகியாக த்ரிஷா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கமலுடன் மன்மதன் அம்பு, தூங்கா வனம் போன்ற படங்களில் நடித்திருந்தார் திரிஷா.

இந்நிலையில் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்த ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாக தகவல் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருந்தார்.

தக் லைஃப்பில் இரட்டை வேடத்தில் சிம்பு

தன்னுடைய நாற்பத்தி எட்டாவது படத்தில் சிம்பு திருநங்கையாக நடிக்க இருக்கிறார். இப்போது தக் லைஃப் படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளாராம். அதுவும் செம வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி தக் லைஃப் படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக சொன்ன துல்கர் மற்றும் ஜெயம் ரவி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். ஏனென்றால் ஏற்கனவே இருவரும் மணிரத்தினம் படத்தில் நடித்துள்ளனர்.

துல்கர் மணிரத்தினத்தின் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். மீண்டும் மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு கிடைத்த நிலையில் சில காரணங்களினால் அதை ஆரம்பத்தில் தவிர்த்து உள்ளனர்.

ஆனால் இப்போது மீண்டும் தக் லைஃப்பில் இவர்கள் இடம் பெறுவது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படத்தை பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் மிகப் விரைவில் வெளியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்