சொன்னதை செய்த மாஸ்டர் பீஸ் ஹீரோ.. கேப்டனுகாக சண்முக பாண்டியனுக்கு செய்த உதவி

Vijayakanth : கடந்த டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் எண்ணற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.

இந்நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் நிலையான ஹீரோ இடத்திற்கு அவரால் வர முடியவில்லை.

இப்போது அன்பு இயக்கத்தில் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர் ஆகியோர் நடித்து வரும் நிலையில் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்போது படைத்தலைவன் படத்தில் மாஸ்டர் பீஸ் ஹீரோ களமிறங்கி உள்ளார்.

படைத்தலைவன் படத்தில் லாரன்ஸ்

கேப்டனின் மறைவின் போது லாரன்ஸ் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி இப்போது படைத்தலைவன் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இதற்காக லாரன்ஸிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. இப்போது லாரன்ஸ் வருடத்திற்கு கிட்டத்தட்ட 6,7 படங்களில் நடித்து பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் கேப்டனுக்கு நன்றி கடனாக அவரது மகனை சினிமாவில் தூக்கிவிட படைத்தலைவன் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் விஷாலும் சண்முக பாண்டியனுக்கு உதவுவதாக அப்போது வாக்குறுதியை கொடுத்திருந்தார்.

நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த போது நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதையே காற்றில் பறக்கச் செய்த விஷால் இப்போது கேப்டன் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை அடுத்த படங்களில் செய்கிறார் என்பதை பொருத்து இருந்து பார்போம்.

சண்முக பாண்டியனுக்கு உதவி செய்த லாரன்ஸ்

shanmuga-pandian-lawrence
shanmuga-pandian-lawrence
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்