ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

ஹிட்டு, பிளாப்னு சொல்ல நீங்க யாரு.? ப்ளூ சட்டை, பயில்வனை வம்புக்கு இழுத்த வாரிசு நடிகை

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் நேரடியாக திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து விட்டு தான் அக்கம் பக்கத்தில் படத்தைக் குறித்து சில விவாதங்கள் நடக்கும். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் படத்தை யாரும் நேரடியாக திரையரங்குக்கு சென்று பார்ப்பதில்லை.

சினிமா விமர்சகர்கள் என்று சிலர் படத்தை பார்த்துவிட்டு தங்களது யூடியூப் சேனலில் விமர்சனம் செய்கின்றனர். இதை பார்த்துவிட்டு தான் பெரும்பாலான ரசிகர்கள் தற்போது திரையரங்குகளுக்கே செல்கிறார்கள். ஒருவேளை படம் நன்றாக இருந்தும் இவர்களது தவறான விமர்சனத்தால் படம் தோல்வி அடைந்ததும் உண்டு.

Also Read : எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா.? மேடையில் விஜய்யை கிழித்த பயில்வான்

இந்நிலையில் அதிகமான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் போன்ற பிரபலங்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு தான் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு சினிமா வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருக்கிறது.

சரத்குமாரின் வாரிசான வரலட்சுமி சரத்குமார் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கன்னடத்தில் வெளியான கரால ராத்திரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் கொன்றால் பாவம் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி நடித்துள்ளனர்.

Also Read : சூரியவம்சம் இல்ல, சிவாஜி படத்தின் அட்ட காப்பி தான் வாரிசு.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

கொன்றால் பாவம் படம் வருகின்ற கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு படக்குழு பேட்டி கொடுத்திருந்தது. இதில் பேசிய வரலட்சுமி சரத்குமார் சினிமா விமர்சகர்களை கிழித்து தொங்க விட்டு உள்ளார். அதாவது ஒரு படம் வெளியான பின்பு 5,6 நாட்கள் கழித்து விமர்சனம் சொல்லலாம்.

ஆனால் படம் வெளியான உடனே மோசமாக விமர்சனம் செய்து படத்தை ஓட விடாமல் செய்து விடுகிறார்கள். ஒரு படம் வெளியாவதில் பல பேரின் கடின உழைப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு படம் ஹிட்டு ஃபிளாப்னு சொல்ல இவர்கள் யாரு. பத்து பேரு படத்தை பார்த்தா எட்டு பேருக்கு பிடிக்கும் இரண்டு பேருக்கு பிடிக்காது.

அப்படி இருக்கையில் உங்களது கருத்துக்களை வந்து பரப்பி படத்தை ஓடாமல் செய்து விடுவது மிகவும் தவறானது. இதனால் பல படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது என சூசகமாக ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் போன்ற சினிமா விமர்சகர்களை வரலட்சுமி வம்புக்கு இழந்துள்ளார்.

Also Read : அட! இது அப்படியே கமல் படத்தின் காப்பி.. டாடா படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -spot_img

Trending News