அப்பாவுக்கு ஜோடி போட்ட நடிகையுடன் மயங்கிய கிடந்த வாரிசு நடிகர்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிவிட்ட சம்பவம்

நடிகைகள் என்றாலே தங்களுடன் நடிக்கும் நடிகர்களின் வயது வித்தியாசம், அழகு, அப்பா, மகன் என எதையும் பார்க்காமல் நடித்து விட்டு தங்களது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு வருவார்கள். அப்படி பல இளம் நடிகைகள் வாய்ப்புக்காக தற்போது வரை அப்பா வயது உள்ள நடிகர்களுக்கு ஜோடிப்போட்டு கொண்டு நடித்து வருகின்றனர். அப்படி ஒரு நடிகை தான் அப்பா நடிகருடனும், மகன் நடிகருடனும் ஜோடி போட்டு நடித்து பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவையே தனது கட்டுக்குள் வைத்திருந்த அப்பா நடிகர், தனது மகனையும் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அந்த வாரிசு நடிகரோ அப்பாவுக்கு ஜோடி போட்டு நடித்த நடிகையின் கன்னங்குழியில் மயங்கி விழுந்து அப்பாவுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். அந்த நடிகையோ, வாரிசு நடிகர் மீது ஆசைப்பட்டு அவருடனும் இணைந்து சில படங்களில் நடித்தார்.

Also Read: அந்தரங்க காட்சியால் நடிகையின் கேரியரை காலி செய்த இயக்குனர்.. ஹோட்டல் வைத்து பிழைக்கும் அவலம்

இவர்களது இந்த காதல் சமாச்சாரம் அப்பா நடிகருக்கு தெரியவர நடிகையை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோதாது என அரசியல் நடிகரிடமும் அந்த நடிகையை பற்றி கூறி, அவரும் மிரட்டவே அந்த நடிகையோ செய்வதறியாமல் இருந்துள்ளார். இருந்தாலும் காதல் கண்ணை மறைப்பது போல் அந்த நடிகையும், வாரிசு நடிகரும் திருமணம் செய்துக்கொள்ளும் வரை சென்று விட்டனர்.

என்னதான் மகன் காதலித்தாலும் அப்பா நடிகருடன் பல நெருக்கமான காட்சிகளில் அந்த நடிகை பல படங்களில் நடித்துள்ளார். அவரை எப்படி மருமகளாக பார்க்க முடியும் என்பதால் அப்பா நடிகரோ சற்று கோபத்தில் பொங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அப்பா நடிகர் துப்பாக்கியை துடைக்கும் சாக்கில் தனது மகன் கையில் குண்டை பாய்ச்சியுள்ளார்.

Also Read: மலையாள ஹீரோ பிடியில் இருக்கும் நடிகை.. வாய்ப்பு இல்லாததால் பெரிய இடத்தை வளைத்து போட்ட சம்பவம்

அப்போது வந்த செய்தித்தாள்களில் கூட இந்த சம்பவம் மறைமுகமாக எழுதப்பட்டது. குண்டு காயமடைந்த வாரிசு நடிகரை பார்க்க துடியாய் துடித்த அந்த நடிகையை அப்பா நடிகர் மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த நடிகையோ அதோடு வாரிசு நடிகர் பக்கமே தலைவிரித்து படுக்கவில்லை. இப்படி வாரிசு நடிகரை காதலித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது இந்த நடிகையின் வாழ்க்கையை பார்த்து மற்ற நடிகைகள் பயந்த கதைகள் கூட உண்டு.

கடைசியில் அந்த நடிகையோ அக்கடுதேசத்து தயாரிப்பாளரை கரம்பிடித்து தற்போது குடும்பம்,குட்டி என வாழ்ந்து வருகிறார். அந்த வாரிசு நடிகரோ அப்பா நடிகர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டு அந்த நடிகையை மறக்கமுடியாமல் பல வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். ஒரு நடிகையால் குண்டுக்காயம் அடைந்த வாரிசு நடிகர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: டாப் ஹீரோவை வளைத்து போட பார்த்த இயக்குனரின் மனைவி.. ருத்ர தாண்டவம் ஆடி வெளுத்து விட்ட பொண்டாட்டி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்