ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

Director Lokesh: கோலிவுட்டின் வெற்றி இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் நாலா பக்கமும் பேரும் புகழையும் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள் எப்படியாவது இவருடைய இயக்கத்தில் ஒரு படத்துலயாவது நடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறார்கள். அதற்கு காரணம் இவருடைய வித்தியாசமான விறுவிறுப்பான கதை தான்.

அப்படித்தான் ரஜினிக்கும் இவருடைய படத்தில் நடித்து வெற்றியை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற விஷயம் உறுதியாகி உள்ளது. தற்போது லோகேஷ் விஜய்யை வைத்து லியோ படத்தை முடித்த நிலையில் இவரது முழு கவனமும் தலைவர் மீது திரும்பி விட்டது.

Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

ஆனால் இதற்கிடையில் லோகேஷை சீண்டும் வகையில் ரஜினி அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறார். அதாவது அடிக்கடி இவரை கூப்பிட்டு ரஜினி அவருடைய கருத்துக்களை திணித்துக் கொண்டு வருகிறார். இதனால் கடுப்பில் சுற்றித்திரிந்த லோகேஷ் க்கு மறுபடியும் ஒரு தலைவலியை கொடுத்திருக்கிறார்.

இதனால் உச்சகட்ட கடுப்பில் லோகேஷ் எதுவும் சொல்ல முடியாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறார். அதாவது தலைவர் 171 படம் முழுக்க முழுக்க என்னுடைய படமாக இருக்க வேண்டும். அதில் எந்தவித LCU கதையையும் கொண்டு வரக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லி இருக்கிறார்.

Also read: லியோ படத்தைப் பார்த்த தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்.. கடுப்பாகி சண்டை போட்ட லோகேஷ்

எனக்கென ஒரு கதையை தயார் செய்து கொள்ளுங்கள். வேண்டுமென்றால் மல்டி ஸ்டார் படமாக எடுக்க முயற்சி பண்ணுங்கள். அதாவது ஜெயிலர் படத்தில் பல முக்கியமான கதாநாயகர்களை நடிக்க வைத்தது போல் இந்த படத்திலும் அதே மாதிரி ஒரு கான்செப்ட் கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதே மாதிரி சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அவர்களுடைய பங்குக்கு லோகேஷை கூப்பிட்டு எந்த அளவிற்கு ஜெயிலர் படம் வெற்றி கொடுத்ததோ அதே மாதிரி இந்தப் படத்திலும் பல மடங்கு லாபத்தை பார்க்க வேண்டும் என்று லோகேஷிடம் கண்டிசனாக சொல்லி இருக்கிறார். இதனால் பெரும் தலைவலி உடன் லோகேஷ் டார்ச்சரை அனுபவித்து வருகிறார். தெரியாத்தனமாக இரண்டு பேரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறோமே என்று புலம்பித் தவிக்கிறார்.

Also read: பிரளயத்தை ஏற்படுத்திய ரஜினி, லோகேஷ் சர்ச்சை.. போஸ்டரை வெளியிட்டு பிரச்சனையை முடித்து வைத்த சன் பிக்சர்ஸ்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -