செம ஸ்டைலாக இருக்கும் தனுஷ்.. வைரலாகும் த கிரே மேன் ஹாலிவுட் பட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை சென்றதே பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக ஹாலிவுட்டில் கால் பதித்து விட்டார்.

ஏற்கனவே தனுஷ் த எக்ஸ்ஆர்டின்ரி ஜர்னி ஆப் தி பகிர்(The Extraordinary Journey of the Fakir) என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை உலகப்புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரசோ பிரதர்ஸ் இயக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் புகழ் கேப்டன் அமெரிக்கா ஸ்டீவ் ரோஜர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது அமெரிக்காவில் த கிரே மேன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் இரண்டு மாதங்கள் நடக்குமென தெரிகிறது.

இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்காக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பதும் கூடுதல் தகவல்.

ஸ்டைலிஷான கெட்டப்பில் தனுஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. தனுஷ் 3 மாதங்கள் தனியாக இருக்க முடியாது என்பதற்காக தன்னுடைய குடும்பத்தினரையும் உடன் கூட்டிச் சென்றுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

the-gray-man-dhanush-photo
the-gray-man-dhanush-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்