காதல் இல்லாமல், ஆண் பெண் நட்பை போற்றிய முதல் தமிழ் படம்.. சந்திரசேகர், தியாகுவுக்கு கிடைத்த அடையாளம்

இப்பொழுதெல்லாம் நட்பை போற்றும் வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே இருக்கும் நட்பையும் உணர்த்தும் பிரியமான தோழி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் சில காலங்களுக்கு முன்பு வரை ஆண், பெண் இருவரும் நட்புடன் பேசினாலே அதை அசிங்கமாக தான் பார்த்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண் பெண் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பை பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் தான் பாலைவனச்சோலை. சொல்லப்போனால் இந்தப் படத்திற்கு பிறகு தான் நட்பு பற்றிய பல திரைப்படங்கள் வெளிவந்தது.

Also read:20 வருடம் கழித்து மணிரத்னத்துடன் இணைந்துள்ள ஜாம்பவான்.. கூடவே இருந்தும் நடிக்காத 80ஸ் ஹீரோயின்

1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் உண்மையான நட்பை பற்றி தெளிவாக காட்டி இருக்கும். அதில் சுஹாசினி கதையின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அவருடன் இணைந்து சந்திரசேகர், ஜனகராஜ், ராஜிவ், தியாகு, கைலாஷ் நாத் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

ஐந்து நண்பர்களுக்கு தோழியாக சுஹாசினி நடித்திருப்பார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இறுதிவரை நட்புடன் வாழ்ந்து மரணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருடைய நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. மிகவும் எதார்த்தமான கதையாக வெளிவந்த அந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

Also read:கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

மேலும் இந்த படத்திற்கு பிறகு தான் சந்திரசேகர் மற்றும் தியாகு இருவருக்கும் ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் அவர்கள் இருவருக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், நல்ல அடையாளத்தையும் கொடுத்தது.

அதன் பிறகு இந்த திரைப்படம் தெலுங்கில் மஞ்சு பல்லகி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சுகாசினி தான் நடித்திருந்தார். பிறகு மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also read:உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -