மொக்கையான வரிகளில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழில் அட்லீ-அனிருத் கூட்டணி ஜெயிக்குமா?

Jawan First Single: அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் படம் உருவாகி இருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. மேலும் பான் இந்திய மொழி படமாக இப்படம் வெளியாக இருக்கிறது.

ஜவான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. மேலும் இன்று ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் படகுழுவினர் இந்தப் பாடலை வெளியிட்டு உள்ளனர்.

Also Read : ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த அட்லீ.. லியோ, கங்குவா ஸ்டைலில் உருவாக்கிய ஜவான் பாடல்

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய், ரஜினி போன்ற மிகப்பெரிய ஸ்டார்களுக்கு தனது குரலில் பாடிய அனிருத் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்காக இந்த பாடலை தமிழில் பாடியுள்ளார். அனிருத் பாடல்களில் இருக்கும் எனர்ஜி இந்த பாடலிலும் இருக்கிறது.

இந்த பாடலுக்கு இன்னும் வலு சேர்த்து உள்ளது ஷாருக்கானின் நடனம். 57 வயதிலும் இளைஞனைப் போல் மாஸாக நடனமாடி இருக்கிறார். மேலும் இந்த பாடலுக்காக தான் பல நாடுகளில் இருந்து நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்ட படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி அட்லீ செலவு செய்துள்ளார்.

Also Read : விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

இந்நிலையில் தமிழில் இந்த பாடல் வரிகள் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் அட்லீ, அனிருத் கூட்டணி தமிழில் ஜெயிக்குமா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அனிருத்தின் குரல் மற்றும் ஷாருக்கானின் நடனம் தான். இப்போது இந்த பாடலை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆகையால் இன்னும் சில மாதங்கள் இந்த பாடலின் மோகத்தில் தான் ரசிகர்கள் இருக்க உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்