சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முதன் முதலில் சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்ட படம்.. ரஜினியை எப்போதும் சுற்றி வரும் பாம்பு செண்டிமெண்ட்

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இன்றுவரை ஒரு மேஜிக் ஆகவே இருக்கிறது. அடுத்த மக்கள் திலகம், நடிகர் திலகம் என்றெல்லாம் இங்கு யாருமே அடித்துக் கொள்வதில்லை. ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது மட்டும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது.

கடந்த மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரைத் தாண்டி அந்த இடத்தில் சினிமா ரசிகர்களால் வேறு யாரையும் யோசிக்க முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவர் மேல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.

Also Read:உங்க கடைசி மூச்சு என் வீட்ல தான் போகணும்.. யாரும் யோசிக்காததை செய்து காட்டிய ரஜினி

ஒவ்வொரு ரஜினி ரசிகர்களுக்கும் அவருடைய படம் ரிலீஸ் ஆகும் போது அந்த தியேட்டரில் போடப்படும் சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்டு மற்றும் பின்னணி இசை அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்று விடும். ஆனால் முதன் முதலில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எந்த படத்தில் இருந்து கொடுக்கப்பட்டது என்பது மட்டும் அவ்வளவாக இதுவரை யாருக்கும் தெரியாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிவகுமார், கமலஹாசன் போன்ற நடிகர்களுடன் இணைந்து தான் படம் பண்ணினார். அவர் முதன் முதலில் தனி ஹீரோவாக நடித்த பைரவி திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தான் கலைப்புலி தாணு தான் ரஜினிகாந்த்திற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:விஜய் பத்தாது என்று சூப்பர் ஸ்டார் ரேஸுக்கு வந்த அடுத்த நடிகர்.. ரஜினிக்கு வந்த பெரிய சோதனை

பைரவி படத்தின் விநியோகஸ்தரான கலைப்புலி தாணு , படத்தின் விளம்பரத்திற்காக சென்னை பிளாசா தியேட்டரில் 40 அடி கட் அவுட்டில் ரஜினிகாந்த் தோள் மீது ஒரு பாம்பை போட்டு அதற்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் என்று போட்டிருக்கிறார். இதுதான் முதல் முதலில் ரஜினியின் பெயருடன் சூப்பர் ஸ்டார் சேர்ந்த தருணம்.

அன்றைய காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு தேவையில்லாத ஒன்று என்று நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதை தாணுவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் தாணு அடுத்த ப்ரிண்டிலேயே சிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி திரைப்படம் என்று ரொம்பவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் போட்டிருந்தாராம்.

Also Read:ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

- Advertisement -

Trending News