சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக்கிய முதல் காதல்.. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட மறக்க முடியாத லவ் ஸ்டோரி

ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் இன்று உலகம் முழுவதும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கியது அவருடைய முதல் காதல் தான் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அந்த வகையில் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு ஒரு லவ் ஸ்டோரியும் ரஜினியின் வாழ்க்கையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் நடிக்க வருவதற்கு காரணமும் அந்த காதல் தான். அதாவது சூப்பர் ஸ்டார் கண்டக்டர் ஆக பணிபுரிந்த சமயத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் நிர்மலா என்ற பெண் அடிக்கடி அவருடைய பேருந்தில் பயணித்திருக்கிறார்.

சினிமாவில் வருவது போன்று ரஜினிக்கும் அவருக்குமான சந்திப்பே சண்டையில் தான் ஆரம்பித்திருக்கிறது. அதாவது பெங்களூர் பேருந்துகளில் பயணிகள் பின்பக்க வழியில் ஏறி முன்பக்க வழியில் இறங்குவது தான் வழக்கம். ஆனால் அந்தப் பெண் முன்பக்க வழியில் ஏறியதை பார்த்த ரஜினி கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக இருவருக்கொரு சிறு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

Also read: ரஜினியின் ஒரே படத்தால் மூடப்பட்ட தயாரிப்பு நிறுவனம்.. ஒரு வழியாய் அசுரனுக்கு பிறந்த விடிவு காலம்

இப்படித்தான் அவர்களுடைய அறிமுகம் சண்டையில் ஆரம்பித்ததாம். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மேல் அவருக்கு காதலும் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை அந்தப் பெண் ரஜினி நடித்த நாடகத்தை பார்த்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே சென்னை திரைப்படக் கல்லூரியில் இருந்து ரஜினிக்கு அழைப்பு ஒன்று வந்ததை பார்த்தியா அவர் புலம்பி இருக்கிறார்.

பிறகுதான் நிர்மலா தான் அதை விண்ணப்பித்திருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது. அப்போது அப்பெண் உங்களுக்குள் நல்ல நடிப்பு திறமை இருக்கிறது. நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று ஊக்கம் கொடுத்து சென்னைக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். மேலும் நீங்கள் பெரிய நடிகராக வரவேண்டும், பல தியேட்டர்களிலும் உங்களுடைய கட்டவுட்டுகள் இருப்பதை நான் பார்க்க வேண்டும் என ஆசையோடு கூறினாராம்.

Also read: ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

அதைத்தொடர்ந்து ரஜினி வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்ப முடிவெடுத்திருக்கிறார். அதற்கு பணமும் அந்த பெண் தான் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இப்படித்தான் அவர் சென்னை வந்து இன்று மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை ரஜினி பெரிய நடிகராக தன் காதலியை தேடி பெங்களூர் சென்று இருக்கிறார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த ரஜினி அழுது கொண்டே சென்னை திரும்பி இருக்கிறார்.

இப்படி தன் வாழ்க்கையில் மலர்ந்த அந்த முதல் காதலை ரஜினி ஒரு முறை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். மேலும் நிர்மலாவை இன்று வரை சந்திக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் பேசினாராம். இருந்தாலும் அப்பெண் ரஜினியின் இந்த வளர்ச்சியை எங்காவது பார்த்துக் கொண்டு தான் இருப்பார். இப்படி சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக நமக்கு கொடுத்த அந்த முகம் தெரியாத பெண்ணை நினைத்து ரசிகர்களும் உருகித்தான் போகிறார்கள்.

Also read: பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்