முதல் படம் மரண ஹிட், தற்போது காணாமல் போன 6 நடிகைகள்.. கவர்ச்சியால் சினிமாவை வெறுத்த மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோயின்கள் தான் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் விரல் விட்டு என்ன கூடிய சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர்கள் சில காரணங்களால் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்கள். அப்படியாக காணாமல் போன முதல் படத்திலேயே மரண ஹிட் கொடுத்த 6 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

கிரண்: சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெமினி. இதில் விக்ரம் உடன் கிரண் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். அதிலும் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடித்து இருப்பார். அதன்பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் டாப் ஹீரோக்களின் படங்களில் குத்துப் பாடல்களுக்கு மட்டும் தோன்றி இருப்பார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அவ்வப்போது கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை வெளியீட்டும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

Also Read: எல்லாத்தையும் நிறுத்திவிட்டு கௌரவமாக வாழும் 2 ஹீரோயின்கள்.. அவங்கள பாத்து கத்துக்கோங்க கிரண்

ரீமாசென்: இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் உருவான திரைப்படம் மின்னலே. இதில் மாதவன் உடன் ரீமாசென் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். அதிலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் ரொமான்டிக் காதலர்களாகவே வலம் வந்தனர். தனது முதல் படத்திலேயே இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட ரீமாசென் அதன்பின் ஒரு சில படங்களில்  ஹிட் கொடுத்துள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் மும்பை தொழிலதிபரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஷெரின்: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இதில் தனுஷ் உடன் ஷெரின் இணைந்து நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து விசில், ஸ்டுடென்ட் நம்பர் 1, பீமா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 3 தமிழில் கலந்து கொண்டு 4வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் பிரபலமான இவர் மீண்டும் பட வாய்ப்புக்காக உடல் எடை எல்லாம் குறைத்து உள்ளார். இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் அமையவில்லை. 

Also Read: ஆளே மாறிப்போன ரீமாசென்.! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.?

கேத்ரின் தெரசா: பா ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இதில் கார்த்தி உடன் கேத்ரின் தெரசா இணைந்து நடித்திருப்பார். அதன் பின்னர் கதகளி, கணிதன் போன்ற ஹிட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் கலகலப்பு 2 படத்தில் அதீத கவர்ச்சி காட்டியும் பயனில்லாமல் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

ரித்திகா சிங்: சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இதில் மாதவன் உடன்  ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருப்பார். அதிலும் தனது முதல் படத்திலேயே குத்துச்சண்டையின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருந்தாலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

மீரா ஜாஸ்மின்: லிங்குசாமி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். இதில் மாதவன் உடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்திருப்பார். அதிலும் தனது படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டாத நடிகையாக வலம் வந்த தான் நடிகை மீரா ஜாஸ்மின். தனது துடுக்குத்தனமான நடிப்பின் மூலம் புதிய கீதை, சண்டக்கோழி, போன்ற ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். கவர்ச்சியால் தான் சினிமா வாய்ப்பு என்ற நிலையில் தற்பொழுது மீரா ஜாஸ்மின் சினிமாவையை வெறுக்கும் அளவிற்கு இருந்து வருகிறார்.

Also Read: 2 நடிகைகளை ஓரங்கட்டி அறிமுகமான மீரா ஜாஸ்மின்.. ரன் படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாலிவுட் ஹீரோயின்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை