நீங்க கெட்ட வழியில போறீங்க.. எச்சரித்த எம்ஜிஆர்! பதிலடி கொடுத்த வாலி

60களில் தமிழ் கலைஞரும், முன்னணி திரைப்பட பாடலாசிரியராக விளங்கிய கவிஞர் வாலி, திரைப்படங்களில் கிட்டத்தட்ட 15,000 பாடல்களுக்கு மேலாக எழுதி சாதனை புரிந்தவர். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்திருக்கிறார்.

இவ்வாறு சினிமாவில் ஊறிக்கிடந்த வாலிக்கும், நடிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்த எம்ஜிஆருக்கும் இடையே நடந்த முதல் சண்டையை தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி அழைத்திருப்பது தற்போது ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருலோக் சந்தர் இயக்கத்தில் உருவான ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்திற்கு கண்ணதாசன் ஒரு பாடல் எழுதிய, மீதி பாடல்களை வாலி எழுதி உள்ளார். அதற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் நடைபெற்று நான்கு நாளைக்கு முன்பு, வாலியின் சகோதரி மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் மும்பை வந்திருப்பதாகவும் அவர்களைப் பார்க்கச் செல்வதாக ஏவிஎம் ரங்கசாமி இன்சார்ஜராக இருந்ததால் அவரிடம் அனுமதி பெற்றுச் சென்றுள்ளார்.

ஆனால் வாலி, குடும்பத்தினரை பார்க்க போவதாக சொல்லாமல் தனக்கு மும்பையில் பொண்ணு பார்க்கப் போவதாக சொல்லிவிட்டு ஐந்தாயிரம் முன்பணம் வாங்கி சென்று விட்டு ரெக்கார்டிங் நடக்கும் அன்னைக்கு நான் வந்துவிடுகிறேன் என்று கிளம்பி உள்ளார்.

அதன் பிறகு தயாரிப்பாளர், ரங்கசாமி இடம் கேட்க ‘வாலி பொண்ணு பார்க்க சென்றுள்ளார்’ என்றதும், தயாரிப்பாளர் நியாயமான காரணம் என்பதால் வித்து விட்டாராம். இதையறிந்த பத்திரிக்கையாளர்கள் வாலி மும்பைக்கு பொண்ணு பார்க்க சென்றுள்ளார் என்று பிரபலப்படுத்தி விட்டனராம்.

எனவே பேப்பரில் இந்த செய்தியை படித்த எம்ஜிஆர் வாலியை அழைத்து, ‘பொண்ணு புடிச்சிருக்கா?’ என்று கேட்க, வாலி ‘பிடிக்கவில்லை’ என்று பதிலளிக்க, அதன்பிறகு எம்ஜிஆர் ‘நீங்க கெட்ட வழியில் போவதாக கேள்விப்பட்டேன். உங்களுடைய திருமணம் என்னுடைய தலைமையில் நடக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

பிறகு வாலி நீண்ட நாட்களாக காதலித்த ரமண திலகம் என்பவரை திருப்பதியில் திடீரென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு எம்ஜிஆர் வாலியை டிபன் சாப்பிட அழைத்து, அவருடன் ஆறு வகையான டிபன் அளித்து எனக்கு ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற கேட்டுள்ளாராம்.

எனவே வாலியும் கேஆர் விஜயா உடன் நடித்த ‘எங்கே போய்விடும் காலம் என்னையும் வாழ வைக்கும்’ என்ற பாடலை எழுதி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். இவ்வாறு வாலி மற்றும் எம்ஜிஆர் இருவருக்கும் இடையே நடந்த சலசலப்பான விஷயம் திடீர் திருமணத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது என்பதை தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்