வளரும் போதே ஆர்வக்கோளாறில் விஜய் நடித்த படம்.. அப்பாவை மதிக்காமல் கையில் எடுத்த ஆயுதம்

Actor Vijay: விஜய் தற்போது அதிரடி, ஆக்சன் போன்ற மாஸ் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடிப்பை தெறிக்க விட்டு வருகிறார். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் வளர்ந்து வரும் போது ஆர்வக்கோளாறில் சில படங்களை சரியாக தேர்வு செய்ய முடியாமல், சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

அதாவது இவர் சினிமாவிற்கு அறிமுகமான போது நடித்த படங்கள் ஆன காலமெல்லாம் காத்திருப்பேன், ஒன்ஸ்மோர், லவ் டுடே, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான காதல் கதையை கொண்ட படங்களாக இருக்கும்.

Also read: என்னோட ரசிகன் இதை ஏத்துக்க மாட்டான்.. விஜய் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது எனக் கூறிய நாகார்ஜுனா

அப்பொழுது மட்டும் இல்லை இப்பொழுது பார்த்தாலும், சில காட்சிகள் இது எந்த படத்தின் கதை என்று குழம்பிப் போகும் அளவிற்கு ஒரே மாதிரியாக இருக்கும். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டு விஜய்க்கு வந்த படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட காதல் படங்கள் தான். 8 படங்களும் ஒரே மாதிரியான லவ் ஸ்டோரியை வைத்து நடித்திருப்பார்.

அப்பொழுது இவருக்கே தோன்றிய விஷயம் ஏதாவது வித்தியாசமான படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த நேரத்தில் அறிமுக இயக்குனரான வின்சென்ட் செல்வாவிற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். இவர் ஒரு வித்தியாசமான கதையை தயார் செய்து விஜய்யிடம் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட விஜய் உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.

Also read: இந்தியாவை புரட்டி போட்டவருடன் கூட்டணி போடும் ஜோசப் விஜய்.. அரசியல் என்ட்ரினா இப்படி இருக்கணும்

ஆனால் இவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு இந்த கதை பிடிக்கவில்லை. அதனால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ஆனால் விஜய் அவருடைய அப்பா பேச்சை மதிக்காமல் அந்த படத்தில் நடித்து விட்டார். அப்படி விஜய், அப்பா பேச்சைக் கேட்காமல் நடித்த படம் தான் பிரியமுடன்.

இப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக விஜய் கலக்கி இருப்பார். இதில் விஜய் வில்லன் கதாபாத்திரம் என்பதால் இவருடைய தந்தைக்கு விருப்பமே இல்லை. அத்துடன் வளரும்போது இப்படி ஒரு ஆபத்தான விஷயத்தை செய்கிறாரே என்று பெரும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

Also read: விஜய்க்கு ஜால்ரா தட்டிய வனிதா.. ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் அவங்க ஸ்டைலிலே கொடுத்த பதில்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்