கடைசி காசு வரை இழந்து சண்டை போட்டு கமல் எடுத்த படம்.. சம்பளமே வாங்காமல் நடித்த ஹீரோ

சிவாஜி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரஜினி தன் கையில் இருக்கும் எல்லா காசையும் கொடுத்து ஒரு வழக்கை நடத்துவார். அதேபோன்று கமல்ஹாசனும் தன் கையில் இருக்கும் அனைத்து காசையும் போட்டு ஒரு திரைப்படத்தை எடுத்தார். ஆனால் சில பல சர்ச்சைகளின் காரணமாக அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

கடந்த 2000 ம் ஆண்டில் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் தான் ஹேராம். அப்படத்தில் அவருடன் இணைந்து ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மகாத்மா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது.

Also read : ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் அந்த படத்திற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்க கமல்ஹாசன் இந்த படத்திற்காக கையிருப்பு அனைத்தையும் செலவு செய்திருக்கிறார். இதனால் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இப்படி அவர் கஷ்டப்படுவதை பார்த்த ஷாருக்கான் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதன் பிறகு கமல் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அவர் பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதனால் கமல் அவருக்கு ஒரு வாட்ச்சை பரிசாக கொடுத்தார்.

Also read : ஆண்டவர் தலையை உருட்டும் தயாரிப்பாளர்.. ஆளவந்தான் படத்தில் கமல் செய்த மிகப்பெரிய தவறு

அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு முதன் முதலில் சுப்ரமணியன் என்பவர் தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் அவரிடமும் கமலுக்கு காசு சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு தான் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க வந்தார்.

இப்படி கமல் கடைசிவரை போராடி சண்டையிட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து தான் இந்தப் படத்தை எடுத்தார். ஆனால் அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையாமல் போனது தான் பரிதாபம். இருப்பினும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also read : இன்றைய அரசியலுக்கு சவுக்கடி கொடுத்த கமல்.. அரண்டு போய் கெஞ்சிய உதயநிதி