ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மாஸ் ஹீரோ மூஞ்சியில் கரியை பூசிய லியோ பட வசூல்.. அக்கட தேசத்தையும் மிரட்டும் லியோ தளபதி

Vijay in Leo: லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் லியோ. இப்படம் உலகம் முழுவதும் நேற்று அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிக்கொண்டு வருகிறது. என்னதான் இப்படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தற்போது வரை படுஜோராக ஆட்டம் போட்டு வருகிறது.

அதற்கு காரணம் விஜய்யின் வெறித்தனமான நடிப்பும், லோகேஷின் அற்புதமான படைப்பும் சேர்ந்த கலவை தான். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்திய படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் மற்றும் கேரளாவில் லியோ படத்திற்கு போட்டியாக எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் தெலுங்கில் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படம் நேற்று வெளியாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் அதிக போட்டிக்கு நடுவில் லியோ படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த வகையில் ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடித்த படத்துக்கு மட்டுமே அதிக வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் லியோ படம் வசூல் அளவில் பெரிய அடி வாங்கும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி அப்படியே உல்டாவாக மாறி இருக்கிறது. அதாவது பாலகிருஷ்ணா படத்தை விட விஜய் நடித்த லியோ படத்திற்கு தான் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் தெலுங்கில் மட்டுமே ஒரு நாள் கலெக்ஷனில் 16கோடி வசூலை வாரி குவித்திருக்கிறது.

ஆனால் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படம் உலக அளவில் மொத்தமாகவே 20 கோடி வசூலை தான் பெற்றிருக்கிறது. இதனால் பாலகிருஷ்ணாவை வசூல் அளவில் தோற்கடித்து அவர் மூஞ்சில் கரியை பூசி விட்டது லியோ படம். அத்துடன் இன்று தெலுங்கில் ரவி தேஜா நடித்த டைகர் நாகேஸ்வர ராவ் என்கிற படம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்துடன் லியோ படமும் போட்டி போட்டு வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கு நடுவே எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் எப்படியும் லியோ படம் தான் வசூலில் வேட்டையாட போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஏனென்றால் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அது போல தெலுங்கில் பாலகிருஷ்ணா படமும். அப்படிப்பட்ட படமே தற்போது வசூலில் பின் தங்கிய போது கண்டிப்பாக இன்று வெளியாகிய படமும் வசூலில் அடிபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News