சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

15 வருடமா கிடப்பில் போடப்பட்ட படம்.. எம்ஜிஆரை வைத்து பாக்யராஜ் செய்த சாதனை

தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்த கே பாக்யராஜ், பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா, நம்பியார், சங்கீதா, வி எஸ். ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படம் உருவானது. ஆனால் அந்த படம் பாதியில் அப்படியே ஓரம் கட்டப்பட்டது.

ஏனென்றால் அரசியலில் ஆர்வம் கொண்ட எம்ஜிஆருக்கு முதல் அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அதன்பின் 15 வருடம் கழித்து எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையான பாக்கியராஜ் அந்த படத்தை அவசர போலீஸ் 100 என்று எடுத்து அசத்தினார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படம் ஒரு கண்டினியூட்டி (continuity) படம். அதாவது நம்பியார், சங்கீதா, வி எஸ். ராகவன் ஆகியோர் ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தின் அதே கதாபாத்திரங்களில் அதன் தொடர்ச்சியாக பாக்கியராஜ் இயக்கிய அவசர போலிஸ் 100 படத்திலும் நடித்தனர்.

பாதியில் கிடப்பில் போடப்பட்ட அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தின் ஏறக்குறைய 4000 அடி திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்றார்போல் பாக்யராஜ் கதை அமைத்து அவசர போலீஸ் 100 என பெயர் மாற்றி வெளியிட்டார். இதில் பாக்யராஜ் உடன் கௌதமி, சில்க் ஸ்மிதா போன்றோரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

1976-ல் பாதியில் நின்று போன எம்ஜிஆரின் படத்தை 1990-ல் 15 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எடுத்தார் என்ற விஷயம் தற்போது பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Trending News