விஜய்யை அன்றே கணித்த பாலுமகேந்திரா.. மேடையில் உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்!

அந்த மாதரி முகம் கொண்டவர் தளபதி விஜய், மறைந்த இயக்குனரின் பாலுமகேந்திராவின் நினைவை இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில், மாமனிதன் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் பேட்டியில் பேசிய சீனு ராமசாமி, தளபதி விஜய்யை பற்றி மறைந்த பாலு மகேந்திர தெரிவித்த பதிவை பகிர்ந்துள்ளார். அதில் தான் பாலுமகேந்திராவிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்த போது தளபதி விஜய்யின், வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதை பார்த்த பாலுமகேந்திரா தன்னிடம் வந்து இவர்களெல்லாம் யார், ஏன் இங்கு நிற்கிறார்கள் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு சீனு ராமசாமி விஜயின் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கின்றனர் என்று கூறினாராம். உடனே பாலு மகேந்திரா இவர்கள் அதற்காக மட்டும் தான் நின்றுகொண்டிருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சீனுராமசாமி விஜயின் திரைப்படங்கள் தொடர் வெற்றியை கொடுத்து வருகிறது.

மேலும் இவரது திரைப்படங்களை பார்ப்பதற்காக கல்லூரி இளைஞர்கள், ரசிகைகள் என கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு சென்று அலை மோதுகின்றனர் என்று சீனு ராமசாமி பாலுமகேந்திராவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாலுமகேந்திரா அது மட்டும் கிடையாது, விஜய்க்கு பூனை முகம் உள்ளதால் அவரால் எல்லாரையும் எளிதாக கவரமுடியும் என்றும், அதன் காரணமாகவே விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் உள்ளனர்.

இன்னும் பல வருடங்கள் விஜய் திரைப்படங்களில் நடித்து வந்தால் கண்டிப்பாக இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் உலகமெங்கும் இருப்பார்கள் என்று, பாலுமகேந்திரா அப்போது தெரிவித்திருந்தது போல் தளபதி விஜய் தற்போது உள்ளார் என சீனு ராமசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாலுமகேந்திரா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து, பின் பல திரைப்படங்களை இயக்கியும், ஒளிப்பதிவும் செய்துள்ளார். இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -