டாப் ஹீரோவை வளைத்து போட பார்த்த இயக்குனரின் மனைவி.. ருத்ர தாண்டவம் ஆடி வெளுத்து விட்ட பொண்டாட்டி

பிரபல இயக்குனர் ஒருவரின் மனைவி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது உண்டு. அதற்கு காரணம் அவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர். அப்போது இந்த இயக்குனரின் படத்தில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே நடிகை தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் அவர் டாப் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக பழக முயற்சித்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Also read: இளம் ஹீரோ மேல் இயக்குனருக்கு வந்த ஆசை.. மானத்தை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடிய நடிகர்

அதன் காரணமாகவே நடிகரின் மனைவி இந்த நடிகைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருந்திருக்கிறார். இது இப்படி இருக்க நடிகையின் முயற்சியை புரிந்து கொண்ட நடிகர் நாசுக்காக விலகிப் போய் இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நடிகருடைய மனைவியின் காதுக்கும் வந்திருக்கிறது.

இதனால் கடும் கோபம் அடைந்த அவர் நடிகையை சந்தித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும் நடிகையின் போக்கு அப்படியேதான் இருந்திருக்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத நடிகரின் மனைவி நடு ரோட்டிலேயே நடிகையை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து விட்டிருக்கிறார்.

அதன் பிறகு தான் இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இந்த சர்ச்சை நடிகையின் பெயரை ரொம்பவே டேமேஜ் செய்து விட்டது. தற்போது சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்