சிம்புவை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்.. இன்றும் அலறி துடித்து முதல் ஆளாய் வரும் STR

Actor Simbu: சிம்பு ஆரம்ப காலத்தில் பல சேட்டைகளை செய்து சர்ச்சைகளுக்கு ஆளானார். அதனால் அவருடைய பெயர் கொஞ்சம் அல்ல ரொம்பவே டேமேஜ் ஆனது.

அப்படிப்பட்டவரை நம்பி தன் படத்தில் நடிக்க வைத்து மறுவாழ்வு கொடுத்த பெருமை மணிரத்னத்திற்கு உண்டு. சுருக்கமாக சொல்லப்போனால் சிம்புவுக்கு செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியவரும் இவர்தான்.

அந்த வகையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்புவை கமிட் செய்த போது பலரும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார்.

சிம்புவுக்கு கிடைத்த மறுவாழ்வு

திடீரென எஸ்கேப் ஆகிவிடுவார். கேரக்டர் சரியில்லை என சொல்லி இருக்கின்றனர். ஆனாலும் அந்த கேரக்டருக்கு சிம்பு தான் பொருத்தம் என மணிரத்தினம் நடிக்க வைத்திருக்கிறார்.

அதன் பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு ஒளிவட்டமே தோன்றியிருக்கிறது. இந்த நன்றியை சிம்பு எந்த காலத்திலும் மறக்க மாட்டார்.

அந்த மரியாதை, குரு பக்தி இப்போதும் அவருக்கு இருக்கிறது. இதுதான் தக் லைஃப் படத்தில் அவர் இணைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இப்படத்தில் அவருக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே கமல் தயாரிப்பில் நடிக்கும் சிம்பு தற்போது அவருடன் இணைவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்.

 

Sharing Is Caring:

Leave a Comment

அதிகம் படித்தவை