2 வில்லன்களை ரிஜெக்ட் பண்ணிய இயக்குனர்.. பாலிவுட் சாக்லேட் பாய்க்கு ஓகே சொன்ன அஜித்

Ajith said OK to Bollywood Chocolate Boy for Good Bad Ugly movie: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்,

தற்போது விடாமுயற்சியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக பைக் எடுத்துக்கொண்டு திரும்பவும் மத்திய பிரதேச காட்டு பகுதியில் டூர் செல்ல கிளம்பிவிட்டார்.

இதற்கிடையே விடாமுயற்சி படம் டிராகிவிட்டது என்று அஜித்தின் நல விரும்பிகள் கொளுத்தி போட்டனர்.  

இதனால் கொதித்து எழுந்த அஜித் விடாமுயற்சி படத்தில் சாகசமான சண்டை காட்சிகளை வலைதளத்தில் பகிர்ந்து இன்னும் விடா முயற்சி  கைவிடப்படவில்லை,

விடாமுயற்சி விரைவில் திரைக்கு வரும் என்பது போன்ற  செய்தியை சூசகமாக தெரிவித்து இருந்தார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் விடாமுயற்சியின் இறுதி கட்ட படபிடிப்பை நிறைவு செய்து ஜூன் மாதத்தில் இருந்து தனது அடுத்த படமான குட் பேட்அக்லியில் இணைய உள்ளார் அஜித்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன் பிரம்மாண்டதயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட்அக்லி, மூன்று காலகட்டங்களில் நடக்கப்படும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட டைம் டிராவல்ஆக்சன் மூவி ஆகும். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் பூஜை போடப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜப்பானில் நடைபெற உள்ளதாம். ஜுனில் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து வேலைகளையும்  தயார் செய்து வருகின்றனர்.

குட் பேட் அக்லி படத்தில் களம் இறங்கும் பாலிவுட் சாக்லேட் பாய்

இதற்கான நடிகர்கள் தேடலில், வில்லன் நடிகராக பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் அனிமல்  படத்தின் வில்லன் பாபி தியோலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இவர் ஏற்கனவே கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக தோன்றி  உள்ளதால் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்தனர். 

அது மட்டும் இன்றி ஜெகபதி பாபு அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டபோது இவரை மக்கள் ஏற்கனவே அடிக்கடி வில்லனாக பார்த்து பழகி உள்ளதால் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்து விட்டனராம் படக்குழு.

Bobby Deol, John abraham and Jagapathy Babu

இறுதியாக பாலிவுட்டில் பதான் படத்தின் மூலம் பாலிவுட்டை தெறிக்க விட்ட வில்லன் ஜான் ஆபிரகாமின் பெயர் குட் பேட்அக்லி வில்லன் கதாபாத்திரத்திற்கு அடிபட்டு வருகிறது.

பாலிவுட் சாக்லேட் பாயாக வலம் வரும் இந்த ஆறடி ஆப்பிள் ஜான் ஆபிரகாம், பதான் படத்தில் ஷாருக்கானுக்கு இணையாக வில்லத்தனத்தில் தெறிக்க விட்டிருந்தார்.  

அவர் இந்த படத்தில் அஜித்துடன் இணைவது படத்திற்கு மேலும் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜான் ஆபிரகாம் நடிக்க இருந்தாராம் அது முடியாமல் போகவே இப்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது. 

2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் நோக்கோடு தீவிரமான  ப்ரீ ப்ரொடக்சன் பணியில் இறங்கி உள்ளனர் குட் பேட்அக்லி படக்குழுவினர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்