திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தூது விட்ட விஜய் சேதுபதி.. இப்படி ஒரு காரணத்தை கூறி மறுத்த இயக்குனர்

விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேமியோ ரோல்களில் நடித்து இன்று சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக இவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்று யாரும் அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் இவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச நேரமாவது தூங்குவாரா, இல்லையா என்பதுதான் ரசிகர்கள் மனதில் இருக்கும் பெரிய கேள்வி. அந்த அளவுக்கு இவர் இப்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் மாதத்திற்கு ஒரு படம் என்று வருடம் முழுவதிலும் 12 படங்களுக்கு மேல் இவரின் நடிப்பில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம், மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

யார் எப்பொழுது கால்ஷீட் கேட்டாலும் தயங்காமல் கொடுக்கக்கூடிய ஒரே நடிகர் விஜய் சேதுபதி மட்டும் தான். இதனாலேயே பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

தற்போது விஜய் சேதுபதி, இயக்குனர் நலன் குமாரசாமி உடன் இணைந்து படம் பண்ணுவதற்காக தூது விட்டிருக்கிறார். ஆனால் அவரோ விஜய் சேதுபதியின் அழைப்பை நாசுக்காக புறக்கணித்துள்ளார். நலன் குமாரசாமி, விஜய் சேதுபதியை வைத்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

இதனால் மீண்டும் அவருடன் இணைந்து பணி புரிவதற்கு விஜய் சேதுபதி விரும்பி இருக்கிறார். ஆனால் இயக்குனரோ விஜய் சேதுபதியை வைத்தே தொடர்ந்து படம் எடுத்தால் அதுவே தன்னுடைய ப்ராண்டிங் ஆக மாறிவிடும் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தற்போது கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று அவர் விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார். இதனால் இவர்கள் இருவரின் கூட்டணியில் விரைவில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது.

- Advertisement -

Trending News