நியூஸ் ரீடர் பெண்ணை பேப்பரைப் போல் புரட்டிய டைரக்டர்.. ஆசை காட்டி பங்கம் பண்ணிய இயக்குனர்

News Reader Report: எப்போதுமே இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவது தான் மனித இயல்பு. ஆசை யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப நியூஸ் வாசித்துக் கொண்டு காலங்களை ஓட்டிய ஒரு ஆர்டிஸ்ட் திடீரென்று சினிமாவிற்குள் நுழைந்து பேரும் புகழும் பணம் வசதி எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதுவும் இவரை போல செய்தி வாசிப்பாளராக இருந்து பலரும் தற்போது ஹீரோயினாக வருவதால் இவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.

அந்த வகையில் நியூஸ் வாசிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் நுழைந்தார். அவர் வேறு யாருமில்லை நியூஸ் ரீடர் திவ்யா துரைசாமி. 2019 ஆம் ஆண்டு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் மாகாபா-விற்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மதில், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் கிடைத்த சிறு கதாபாத்திரங்கள் மூலமும் நடித்து வந்தார். இப்படியே மெது மெதுவாக நடித்து ஹீரோயின் ஆகிவிடலாம் என்று கனவுடன் வந்தார். ஆரம்பத்தில் இவரை பார்க்கும் பொழுது குடும்பப் பெண்ணாக முகபாவனை உடன் தான் வந்தார். ஆனால் இப்படியே இருந்தால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்து உடனே கிளாமர் லுக்குக்கு மாறிவிட்டார்.

Also read: கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்.. மக்களை மீட்டெடுத்த மாமன்னன் வீடியோ

அந்த வகையில் கிளாமர் புகைப்படங்களை நிறைய எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதன் மூலம் எப்படியாவது பிரியா பவானி சங்கர் போல் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டார். அப்பொழுதுதான் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இப்படத்தில் இவர்தான் ஹீரோயின் என்று மாரி செல்வராஜ் சொல்லி கூப்பிட்டு இருக்கிறார்.

இவரும் அதனால் ஆசை ஆசையாக ஹீரோயின் ரோல் என்று நம்பி போயிருக்கிறார். போனதும் 80Kg வாழை மரத்தை கையில் தூக்கி கொடுத்து நடக்கும் படி சொல்லிவிட்டார். உடனே அந்த ஹீரோயினும் சரி ஹீரோயின் கதாபாத்திரம் தானே என்று கஷ்டப்பட்டு மாரி செல்வராஜ் சொன்னதை எல்லாம் கேட்டு நடித்திருக்கிறார்.

ஆனால் கடைசியில் பார்த்தால் இவர் ஹீரோயின் இல்லையாம். ஹீரோயின் ஓட அக்கா கேரக்டர் என்பது தெரிய வந்துவிட்டது. சரி மனச தேத்திக்கிட்டு வந்து பார்த்தால் படத்தில் இவர் நடித்த பாதி காட்சிகள் கட் பண்ணி விட்டார்களாம். இது என்னடா எனக்கு வந்த சோதனை என்பது போல் தற்போது புலம்பி தவித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் என்னை ஆசை காட்டி இந்த அளவிற்கு பங்கம் செய்து விட்டாரே என்று மாரி செல்வராஜ் மீது தீராத கோபத்துடன் சுற்றி வருகிறார்.

Also read: துருவ் விக்ரமுக்கு அடுத்தபடியா புது மாப்பிள்ளையை லாக் செய்த மாரி செல்வராஜ்.. எல்லாம் பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை