உன் பொண்டாட்டி போடுற டிரெஸ்ஸை பாரு.. சன்னி லியோனால் சதீஷை வெளுத்து வாங்கிய இயக்குனர்

காமெடி நடிகர் சதீஷ் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவர். இதனால் சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். சமீபத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படத்தில் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா, ஜி பி முத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சன்னி லியோன் புடவையில் வந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தார்.

Also Read : சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்

அதாவது கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட சன்னி லியோன் புடவையில் வந்திருந்தார். இதனால் மேடையில் பேசிய சதீஷ், மும்பையில் இருந்து வந்திருந்த சன்னி லியோன் எப்படி புடவையில் வந்திருக்கிறார், கோயமுத்தூரில் இருந்து வந்த தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்திருக்கிறார் என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மூடர்கூடம் படத்தின் இயக்குனரான நவீன், பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை, சதீஷ் உங்களின் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை கூட நீங்கள் முடிவு செய்தால் அதுவே தவறு தான் என குறிப்பிட்டிருந்தார்.

Also Read : சன்னி லியோன் தான் என்னோட குரு.. வாடகை தாய்க்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

இது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை எடுத்த பின்பு தற்போது மன்னிப்பு கேட்டு சதீஷ் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது அந்த விழாவில் தர்ஷா குப்தா என் அருகில் அமர்ந்திருந்து சன்னி லியோன் எப்படி உடை அணிந்து வருவார் என பேசி இருந்தார். ஆனால் அவர் புடவையில் வருகை தந்திருந்தார்.

இந்த விஷயத்தை மேடையில் பேசலாம் என தர்ஷா குப்தா கூறினார். அதன் அடிப்படையில் தான் நான் பேசி இருந்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக மாறும் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கு எதிராக பேசிய இயக்குனர் நவீன், ஸ்ரீனிவாசன், சின்மயி ஆகியோரை குறிப்பிட்டு சதீஷ் இந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

Also Read : பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் 4 நடிகைகள்.. படு கிளாமரில் தர்ஷா குப்தா