தளபதி 69-வது படத்தை இயக்க துடிக்கும் இயக்குனர்.. கேட் போட்ட உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை தோலுரித்துக் காட்டும் வகையில் இருந்தது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன் ஆரி அர்ஜுனன், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படத்தை சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கிருந்தார். இந்தப் படம் 12 கோடி வசூலாகியுள்ளது. மேலும் ஆறு கோடி ஷேர் ஆக பெறப்பட்டது என படக்குழு சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை விளம்பர வடிவில் புரமோட் செய்த உதயநிதி, நெஞ்சுக்கு நீதி படத்தை அதிக லாபமான படமாக காட்ட முடிவெடுத்தார். இதற்காக அவர் ஆளும் கட்சி நிர்வாகிகள் மூலமாக தனது சொந்த செலவிலேயே தியேட்டரை நிரப்பி அதிலிருந்து படத்தை ஓட வைத்திருக்கிறார்.

இவர் இவ்வாறு செய்ததால் ஷேர் மிகக் குறைவான அளவே வந்திருக்கிறது. இதனால் உதயநிதி ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு தளபதி விஜய்க்கு ஒரு கதையை சொல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, லாபம் காட்டி சித்தரித்த விஷயம் வெளிப்படவும் அங்கேயும் கேட் போடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் விஜயும் தனது 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த நடிக்கவுள்ளார்.

அடுத்தபடியாக தளபதியின் 68-வது படத்தை அட்லி இயக்க ஏஆர் ரகுமான் இசையமைக்க போவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தளபதியின் 69-வது படம் அருண்ராஜா காமராஜ் இயக்குவதில் தீவிரம் காட்டி கொண்டிருப்பதால் அதற்கு விஜய் ஒத்துக் கொள்வாரா என கூடிய விரைவில் தெரிந்துவிடும்.