சென்டிமென்ட்டை வைத்து பப்ளிசிட்டி தேடிய நடிகர்.. சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குனர்

ரேஸ் நடிகரை வைத்து படம் எடுத்து வரும் இயக்குனர் தற்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறாராம். தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோ தான் இதற்கு காரணம்.

பட அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆனபோதும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

அவர்களை கூல் செய்து படத்தை கொண்டாட வைத்து விட வேண்டும் என்று தான் நடிகர் இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறாராம். ஏனென்றால் ஒரு போட்டோ வெளியாக வேண்டும் என்றாலே அதற்கு நடிகரின் அனுமதி வேண்டும்.

அப்படி இருக்கும்போது முக்கிய காட்சியை அவர் வெளியிட்டு இருப்பது இப்படி ஒரு காரணத்துக்காக தான். ஆனால் அதுவே இப்போது பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனால் தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மறுபக்கம் இயக்குனர் யாரிடம் சொல்லி புலம்புவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஏதாவது ஒரு போட்டோவை வெளியிட்டாலே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து இருப்பார்கள். அதை விட்டுவிட்டு முக்கிய காட்சியை வெளியிட்டு மொத்தத்தையும் சொதப்பிவிட்டார் நடிகர்.

இதைப் பார்த்த பலரும் எந்த படத்தில் இருந்து இதை இயக்குனர் சுட்டுருப்பார் என தேட ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் சிலர் நடிகர் இதையெல்லாம் தாண்டி பல ஸ்டண்ட் செய்வார் என சாதாரணமாக கடந்து போய்விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்