வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கமலை நம்பினா திருவோடுதான்.. பலசா இருந்தாலும் நா கிண்டிய அல்வாவே போதுமென டாட்டா போட்ட இயக்குனர்

Actor Kamal: கமல் இப்போது படு பிஸியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் விக்ரம் படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் விக்ரம் வெற்றிக்கு பின் கமலின் நிலைமையே வேறு. ஒருபுறம் தயாரிப்பின் மூலம் தனது ராஜ்கமல் நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

அதுவும் பெரும்பாலும் இளம் நடிகர்களின் படங்கள் தான் கமலின் லிஸ்டில் இருக்கிறது. இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் எச் வினோத் மற்றும் மணிரத்தினம் ஆகியோர் படங்களில் கமல் ஒப்பந்தமாகி இருக்கிறார். விவசாயம் சம்பந்தமான கதை களத்தில் எச் வினோத்தின் படம் உருவாகிறது.

அஜித்துக்கு தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் துணிவுக்கு பிறகு கமல் படத்தை தான் எடுக்க வினோத் திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது வரை போய்க்கொண்டிருக்கிறது. மேலும் பிக் பாஸுக்கும் நேரம் ஒதுக்கி வருவதால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.

மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னை கமல் அழைப்பார் என வினோத் எதிர்பார்த்தார். ஆனால் இந்த படத்தை முடித்த கையோடு மணிரத்தினத்தின் படத்தில் தான் கமல் நடிக்க இருக்கிறாராம். அந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவின் ஷூட்டிங் பின்னி மில்லில் தற்போது நடந்து வருகிறது.

ஆகையால் கமலுக்காக வினோத் காத்திருந்தால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும். இப்படிதான் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மகிழ்திருமேனி பல மாதங்களாக காத்து கிடந்து நேரத்தை வீணடித்தார். இதை நினைத்து சுதாகரித்துக் கொண்ட வினோத் கமலுக்கு டாடா காட்டி விட்டாராம்.

அதாவது கமல் படத்தை இயக்குவதற்கு முன்பாக தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவுக்கு வினோத் வந்துவிட்டார். கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வினோத் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் மூலம் தான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது. இப்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.

- Advertisement -

Trending News