இந்தியளவில் சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குனர்.. பரபரப்பை கிளப்பி அடுத்த பட போஸ்டர்

இந்த வருடம் மார்ச் 11-ம் தேதி விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் இந்தியா முழுவதும் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 1990-களில் காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஆகையால் இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டு வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது. அத்துடன் இந்த படம் 340 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ரத்தம் சிந்திய சரித்திரம்.. பல சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் ஒரு அலசல்

இந்நிலையில் இயக்குனர் விவேக் அக்னி கோத்ரி அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தைப் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அவர் இயக்கும் புதிய படத்தின் போஸ்டரை அவரது பிறந்த நாளன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இந்தப் படமும் இந்தியாவில் நடக்கிற போரின் உண்மை கதை தான். ‘தி வேக்சின் வாரியர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அறிவியல் மற்றும் இந்திய மதிப்புகளின் மூலம் கிடைத்த வெற்றியை எடுத்துரைக்கப் போகின்றனர்.

Also Read: அந்த பொண்ணோட எனக்கு கனெக்ஷனா.? மேடையில் பயில்வனை வெளுத்து வாங்கிய K.ராஜன்

தமிழ் உட்பட 11 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினம் அன்று ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. தற்போது மருந்து பாட்டில் உடன் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல 11 மொழிகளில் வெளியாகும் ‘தி வேக்சின் வாரியர்’ திரைப்படமும் இந்தியாவின் சார்பில் பேசப்படும் படமாகவும் இருக்கும் என்று எண்ணுகின்றனர்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குனர் இயக்கும் புதிய பட போஸ்டர்

the-vaccine-war-cinemapettai
the-vaccine-war-cinemapettai

Also Read: ஷங்கரின் 1000 கோடி பட்ஜெட் படமான வேள்பாரியின் மொத்த கதை இதுதான்.. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு

Next Story

- Advertisement -