என்னை விட்டுருங்க ப்ளீஸ்.. சூர்யா பட நடிகையை ஒரு மாதம் இரவு பகலாய் வச்சு செய்த இயக்குனர்

Tamil Actress: மலையாளத்திலும் தமிழிலும் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் டாப் நடிகை ஒருவர், படப்பிடிப்பு தளத்தில் 30 நாட்கள் தூங்காமல் அவதிப்பட்டு இருக்கிறார். கடைசியில் பொறுமையை இழந்த நடிகை, ‘என்ன விட்டுருங்க ப்ளீஸ்’ என கெஞ்சி இருக்கிறார். சில இயக்குனர்கள் நடிகர் நடிகைகளிடம் எதிர்பார்த்த பர்பாமன்ஸ் வரும் வரை டார்ச்சர் செய்வார்கள்.

அதிலும் சில இயக்குனர்கள் ஆந்தை போல் இரவு நேரத்தில் தான் வேலை பார்ப்பார்கள். 2021 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் தான் ‘ஷாம் சிங்கா ராய்’. இந்த படத்தை இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் எழுதி இயக்கினார். இதில் நானி, சாய் பல்லவி இருவரும் தான் ஜோடியாக நடித்தனர். சாய் பல்லவி தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே, தனுசுடன் மாரி 2 போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

அவர் தெலுங்கில் நடித்த ‘ஷாம் சிங்கா ராய்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரத்தில் தான் நடந்திருக்கிறது. இதில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவிக்கு பகல் நேரத்தில் தூங்கும் பழக்கமே இல்லை, இரவு நேரத்தில் தான் தூங்குவாராம். ஆனால் படப்பிடிப்பில் 30 நாட்கள் இரவில் கண் விழித்து நடித்ததால் பகலிலும் அவரால் தூங்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் சுத்தமாகவே அவரால் முடியவில்லை. இதை இயக்குனரிடம் சொல்ல தயங்கி இருக்கிறார். பின்பு வீட்டுக்கு வந்த சாய் பல்லவி தன்னுடைய தங்கையிடம் இதைப் பற்றி கூறி அழுது இருக்கிறார். உடனே சாய் பல்லவியின் தங்கை ‘ஷாம் சிங்கா ராய்’ படத் தயாரிப்பாளரை சந்தித்து என்னுடைய அக்காவை விட்டுடுங்க ப்ளீஸ்! அவர் இரவு நேர ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்.

30 நாட்களாக அவர் தூங்கல, அவருக்கு 10 நாட்கள் மட்டும் விடுமுறை கொடுங்கள். ரெஸ்ட் எடுத்து விட்டு மறுபடியும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று கேட்டிருக்கிறார். அதன் பின்பு பத்து நாட்கள் ஓய்வெடுத்த பின்னரே சாய் பல்லவி அந்த படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

அப்போதும் இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் அந்தப் படம் முடியும் வரை இரவு பகலாக சாய் பல்லவியை வச்சு செய்து விட்டார். எப்படியோ பல்ல கடிச்சுட்டு அந்த படத்தில் ஒரு வழியா நடித்து முடித்து விட்டேன் என்று சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.