வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

2 வருஷம் காத்திருக்க வைத்த இயக்குனர்.. ஆசை தம்பிக்காக இறங்கி வருவாரா விஜய்

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். எப்போதுமே விஜய் ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுப்பார். ஆனால் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு மட்டும் முன்னரே வெளியாகியிருந்தது. இதன்படி எக்கச்சக்க திரை பிரபலங்கள் லியோ படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் யார் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதாவது முதல்முறையாக விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. அதாவது ஏற்கனவே விஜய்க்கு வெற்றிமாறன் ஒரு கதை ரெடி செய்து உள்ளாராம்.

Also read: கதை கேட்க கூட விருப்பமில்ல, அவரோடு செட்டே ஆகாது.. இயக்குனருக்கு டகால்டி கொடுக்கும் விஜய்

மேலும் விஜய், வெற்றிமாறன் படம் உறுதியான நிலையில் இப்போது தொடங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது வெற்றிமாறனின் லையன் அப்பில் விடுதலை 2, வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்கள் உள்ளது. இதனால் இரண்டு வருடங்களுக்கு இப்போது விஜய்யின் படத்தை இயக்க முடியாது.

இந்நிலையில் விஜய் உடைய ஆசை தம்பி அட்லீ அவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்காக சன் பிக்சர்ஸ் அட்லீக்கு ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுத்த லாக் செய்து வைத்துள்ளது. இப்போது பாலிவுட் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்

ஆகையால் வெற்றிமாறனின் படம் தாமதமாகி வருவதால் அட்லீ படத்தை இயக்க விஜய் வாய்ப்பு கொடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ளது. விஜய்யின் அடுத்த பட அறிவிப்புக்காக எதிர்பார்ப்புடன் உள்ளனர். விஜய்க்கு ஏற்கனவே அட்லீ மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய் தனது சொந்த தம்பி போலவே அட்லீயை பாவித்து வருகிறார். எனவே அட்லீ, விஜய் கூட்டணி அடுத்ததாக உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

Also read: லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. லோகேஷின் மாஸ்டர் பிளான்

- Advertisement -

Trending News