மகிழ் திருமேனியுடன் கைகோர்த்த இயக்குனர்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஏகே 62

கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்த ஏகே 62 பட விவகாரம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்த இப்படம் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி கைக்கு சென்றுள்ளது. இது உறுதியான நிலையில் தற்போது மற்றொரு இயக்குனரும் இப்படத்தில் இணைந்து இருக்கிறார்.

விறுவிறுப்பான கதையை தன்னுடைய ஸ்டைலில் கொடுக்கும் மகிழ்திருமேனி அஜித்தை இயக்கப் போகிறார் என்பதே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவருடன் இயக்குனர் பி எஸ் மித்ரனும் கைகோர்த்துள்ளார். இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இவர் சமீபத்தில் கார்த்தியை வைத்து சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Also read: லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய இரண்டு இயக்குனர்கள்.. ஏகே 62 படத்தின் விறுவிறு அப்டேட்

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏகே 62ல் இவருக்கு என்ன வேலை என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவரே இவர்தானாம். இதுதான் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது கதை தொடர்பான அனைத்தும் முடிவு செய்யப்பட்டு இயக்குனர் மகிழ்திருமேனி லைக்கா நிறுவனரை சந்திக்க லண்டன் சென்றுள்ளார். அங்கு இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு அவருக்கான அட்வான்ஸ் தொகையும் அவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்.

Also read: லோகேஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இதுதான் வித்தியாசம்.. அஜித் டீலில் விட உண்மையான காரணம்

அந்த வகையில் லைக்கா எப்போது வேண்டுமானாலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள். அந்த அறிவிப்பின் போது ரசிகர்கள் எதிர்பார்க்காத சில சர்ப்ரைஸ்களும் வெளிவர இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளிவர திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதனால் விரைவில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பல குளறுபடியில் இருந்து வந்த ஏகே 62 தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தை காட்டிலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் தீவிரம் காட்டி வருகிறாராம்.

Also read: மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

Next Story

- Advertisement -