வாரிசு நடிகையுடன் பின்னிப்பிணைந்த இயக்குனர்.. செக் வைத்த தயாரிப்பு நிறுவனம்

வாரிசு நடிகை ஒருவருடன் இயக்குனர் சுற்றி திரிந்தது தான் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நிலையில் கடைசி படம் அவருக்கு சருக்களை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் அந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு இயக்குனர் தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது இடையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கி கெட்ட பெயரை சம்பாதித்து கொண்டார்.

அதாவது வாரிசு நடிகை ஒருவருடன் பின்னிப்பிணைந்து வந்தார். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது என்று இருந்தனர். அதுவும் வாரிசு நடிகையின் பேச்சுக்கு தலையாட்டும் படி இயக்குனர் மாறிவிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.

அதோடு தன்னுடைய பட வேலைகளிலும் மெத்தனமாக இருந்து வந்துள்ளார். ஆனால் அவருடைய அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரிய ஸ்டாரின் படம். இதனால் தயாரிப்பு நிறுவனம் உடனடியாக இயக்குனரை அழைத்து படத்திற்கான வேலையை பார் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.

இல்லையென்றால் வாய்ப்பு பறிபோய் விடும் என்றும் எச்சரித்தார். இதனால் பயந்துபோய் நடிகர் வாரிசு நடிகையை விட்டுவிட்டு இப்போது தன்னுடைய பட வேலையில் பிஸியாக இறங்கி இருக்கிறாராம். விரைவில் படத்திற்கான அப்டேட் வெளியிட இருக்கிறார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்