உத்தமன் வேஷம் போடும் இயக்குனர்.. மாற்றுத்திறனாளி நடிகையிடம் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்

திரைப்படங்களின் மூலம் தன்னை நியாயவாதியாகவும், உத்தமனாகவும் காட்டிக் கொள்ளும் பல நபர்கள் நிஜ வாழ்வில் அதை கடைபிடிக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமூகத்தின் முன் தன்னை மகாத்மாவாக காட்டிக் கொள்ளும் பலரின் மறுபக்கம் நிச்சயம் மோசமானதாக தான் இருக்கும்.

அப்படி ஒரு மோசமான மறுபக்கத்தை கொண்டிருப்பவர் தான் அந்த பிரபல இயக்குனர். சமூக கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் அந்த இயக்குனர் இப்போது முழு நேர நடிகராகவே மாறி பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் அந்த இயக்குனர் சக நடிகைகளை பார்க்கும் கோணமே வேறு.

Also read:அக்ரிமெண்ட் போட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்த முதலாளி.. நடிகைகளை மிரட்டியே கட்டுப்பாட்டில் வைத்த கொடூரம்

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியவர் தான் அந்த மாற்றுத்திறனாளி நடிகை. அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்தது தான். சூப்பர் ஹிட் அடித்த அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சில வருட இடைவெளிகளில் மீண்டும் வெளியானது. ஆனால் பலருக்கும் ஆச்சரியம் தரும் விதமாக அந்த மாற்றுத்திறனாளி நடிகைக்கு அந்த படத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Also read:காமெடி நடிகர் முகத்தில் சிகரட்டை ஊதிய சைக்கோ நடிகை.. கழுத்தைப் பிடித்து தள்ளிய இயக்குனர்

ஏனென்றால் அந்த இயக்குனர் நடிகையிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று தன் கோர முகத்தை காட்டி இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்னால் இதற்கு சம்மதிக்க முடியாது என்று கூறிய நடிகை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதனால் அவருக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது. அவருக்கு பதிலாக வேறொரு வளர்ந்து வரும் இளம் நடிகை அதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் இயக்குனரின் நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்து தான் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்த பிறகும் கூட இயக்குனர் அந்த நடிகையை இன்னும் தன் கன்ட்ரோலில் வைத்திருப்பது தான் மிகப் பெரிய ட்விஸ்ட்.

Also read:அந்தரங்க மோகத்தால் வழி மாறிய பிரபலம்.. 20 லட்சத்தை சுருட்டிக்கொண்டு கல்தா கொடுத்த கள்ள காதலி

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -