
Director Bala: நடிகர் நடிகைகள் சரியாக நடிக்கவில்லை என்றால் இயக்குனர்கள் கோபப்படுவது நியாயம் தான். ஆனால் அதுவே ஒரு அளவுக்கு மீறி அடிப்பதையும் அவமானப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு விஷயத்தை தான் பாலா செய்ததாக தற்போது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற பேச்சு இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வணங்கான் படத்தில் நடித்த மமிதா பாலா தன்னை சரியாக நடிக்கவில்லை என அடித்ததாக கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
அது விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நான் அப்படி சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் நான் மரியாதையாக நடத்தப்பட்டேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும் பாலாவை சைக்கோ இயக்குனர் என நெட்டிசன்கள் விமர்சித்து தான் வருகின்றனர்.
Also read: 4 நடிகர்களுக்கு பாலா கொடுத்த எதிர்காலம்.. பட்ட கஷ்டத்தை மறந்து சூர்யா செய்த வேலை
ஆனால் அவருக்கே அப்பன் நானு என நிரூபித்த ஒரு இயக்குனரும் இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல மிருகம் உள்ளிட்ட சில விவகாரமான படங்களை இயக்கிய இயக்குனர் சாமி தான். இவர் ஆதி, பத்மபிரியாவை வைத்து மிருகம் படத்தை இயக்கிய போது ஒரு பிரச்சனை வெடித்தது.
அதாவது பத்மபிரியா ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என இயக்குனர் டென்ஷன் ஆகி இருக்கிறார். அந்த கடுப்பில் அனைவர் முன்னிலையிலும் அவரை பளார் என அறைந்திருக்கிறார். இதனால் கடுப்பான பத்மபிரியா சூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் அது குறித்த புகாரையும் எழுப்பி இருந்தார்.
அதில் இயக்குனர் தனக்கு அந்தரங்க தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தது பெரும் அதிர்வலையை கிளப்பியது. அதை அடுத்து இருவரையும் வரவழைத்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து விசாரணை நடத்தியது.
Also read: சேது படம் போல தூக்கி விடப் போகும் சித்தா..! சாமி ஆடப்போகும் சியான்
அதில் இயக்குனர் தான் அடித்ததை ஒப்புக்கொண்டு பத்மப்ரியாவிடம் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் அது தவறு என்பதால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ஒரு வருடம் எந்த படமும் இயக்கக் கூடாது என ரெட் கார்டு விதித்தது. இப்படி பாலாவுக்கே காட்பாதராக இருந்திருக்கிறார் இயக்குனர் சாமி.