சிவகார்த்திகேயனால் இயக்குனருக்கு வந்த ஆபத்து.. துண்ட காணும் துணிய காணும்னு ஓடிய சூர்யா

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது அமரன், ஏ ஆர் முருகதாஸ் படம் என பிசியாக இருக்கிறார். ஆனால் இவரால் ஒரு இயக்குனர் தான் பாவம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த பொங்கலுக்கு இவருடைய அயலான் படம் வெளியாகி இருந்தது. பல வருடங்களாக வெளிவர முடியாமல் தவித்த இப்படம் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது.

ஆனாலும் பிரயோஜனம் இல்லாமல் படம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் இயக்குனர் ரவிக்குமார் இப்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளார்.

சிவகார்த்திகேயனால் சுதாரித்த சூர்யா

அதாவது இவர் சூர்யாவுக்காக ஒரு கதையை சொல்லி சம்மதமும் வாங்கி வைத்திருந்தார். ஆனால் இப்போது சூர்யா இவரிடம் நோ சொல்லிவிட்டாராம்.

இதற்கு முக்கிய காரணம் அயலான் படத்தின் ரிசல்ட் தான். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சூர்யா கங்குவா மூலம் மிகப்பெரும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தோல்வி பட இயக்குனருடன் இணைய வேண்டாம் என அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் படத்தால் இயக்குனர் கட்டி வைத்திருந்த மனக்கோட்டை சரிந்து விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்