வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தன் படத்தில் நயன்தாராவை நடிக்க விடாமல் செய்த இயக்குனர்.. லேடி சூப்பர்ஸ்டாராக மாறி பழி வாங்கிய நயன்

நடிகை நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 75 படங்களுக்கும் மேலாக பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாரா கிளாமராக நடிக்க சமத்தித்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படி இன்று படங்களில் நடிப்பது, தயாரிப்பது, குடும்பத்தை பார்த்துக்கொள்வது என பிஸியாக இருக்கும் நயன்தாராவை, பிரபல இயக்குனர் ஒருவர் அவரது படத்தில் நடிக்கவிடாமல் செய்த செய்தி வெளியாகியுள்ளது. நயன்தாரா தமிழில் முதன்முதலில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நடித்திருப்பார். ஆனால் இப்படம் நயன்தாராவுக்கு வந்த முதல் வாய்ப்பு இல்லையாம்.

Also Read: தாலி கட்டிய பின் அடிமேல் அடி வாங்கும் நயன்தாரா.. 40 வயதில் இப்படி ஒரு முடிவா?

2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான குடைக்குள் மழை திரைப்படம் தான் நயன்தாராவுக்கு வந்த முதல் வாய்ப்பாம். இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருப்பார். மதுமிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க தான் நயன்தாரா முதன்முதலில் பார்த்திபனால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் பார்த்திபன், திடீரென நயன்தாராவை அப்படத்தில் நடிக்கவிடாமல் செய்துள்ளார்.

தற்போது பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட பார்த்திபன், இதுகுறித்து பேசியுள்ளார். யாரையும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது என கூறிய அவர், குடைக்குள் மழை படத்துக்காக நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து அவரை பார்த்திபன் அழைத்துள்ளார். ஆனால் நயன்தாரா பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு வராமல் போனதால், மறுநாள் கால் செய்து, பார்த்திபனிடம் பஸ் எனக்கு கிடைக்கவில்லை நான் இன்று புறப்பட்டு நாளை வந்து விடுகிறேன் என நயன்தாரா கூறினாராம்.

Also Read: தொடர் தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. மேடையில் அந்த இயக்குனரிடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நயன்தாரா

இதனால் செம காண்டான பார்த்திபன், நீங்க என் படத்திற்கு நடிக்க வரவே வேண்டாம் என கூறி நயன்தாராவின் போனை உடனே கட் பண்ணி வைத்தாராம். அதன் பின்பு அடுத்த ஒரு வருடத்தில் தமிழில் நயன்தாரா நடித்த ஐயா படம், குடைக்குள் மழை படத்தை விட வேறலெவலில் ஹிட்டானது. நயன்தாரா தமிழ் சினிமாவில் வந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், ஒருமுறை கூட பார்த்திபனின் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை.

மேலும் நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடித்த பார்த்திபனை கத்தியால் குத்தி பழி வாங்கும் கேரக்டரில் நயன்தாரா படம் முழுவதும் வளம் வருவார். ஆனால் இக்கதாபாத்திரத்தில் பார்த்திபனை தான் நடிக்க வைக்க வேண்டுமென நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து தான் பார்த்திபன் அப்படத்தில் நடித்த நிலையில் , கிளைமாக்சில் நயன்தாராவின் கையால் கத்தியால் குத்தப்பட்டு இறந்துவிடுவார். அன்றைக்கு நயன்தாராவாக இருந்த தனக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில், லேடி சூப்பர்ஸ்டாராக மாறி அப்படத்தில் அவரை பழி வாங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:  2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

- Advertisement -

Trending News