பாகுபலியா, பொன்னியின் செல்வனா? படத்தை பார்த்துட்டு பேசுங்க.. மணிரத்னம் போட்ட போடு

மணிரத்தினத்தின் பல வருட கனவு இப்போது நினைவாகியுள்ளது. பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதை முடித்துக் காட்டியுள்ளார் மணிரத்னம். முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், ஒருபுறம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதாவது ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்தில் காப்பி அடிக்கபட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஆனால் பாகுபலி படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஒரிஜினலாக படமாக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜமௌலி பாகுபலி படத்தில் இடம்பெற்ற மிருகங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கி இருந்தார்.

ஆனால் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யானைகள், குதிரைகள் என அனைத்தும் ஒரிஜினலாக இமேஜ் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் பாகுபலி படத்தை விட பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும்.

மேலும் மணிரத்னம் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ராஜ வம்சாவளி மன்னர்களிடமிருந்து குதிரையை கடனாகப் பெற்றார். அதில் சில குதிரைகள் இறந்து போனதாகவும் செய்திகள் அப்போது இணையத்தில் வெளியானது. மேலும் யானைகள் அதிகமாக உள்ள தாய்லாந்துக்கு சென்று பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு பார்த்து பார்த்து செய்துள்ளார். ஆனால் அசால்டாக பாகுபலி படத்தின் காப்பி என சொல்வது வேதனை அளிப்பதாக அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Next Story

- Advertisement -