பத்து தலையில் வெளிவந்த 8 தலைகள்.. மணல் மாஃபியாவை அநியாயமாய் செய்யும் சிம்பு

ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல வருகிற 30 ஆம் தேதி வெளியாகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்திலிருந்து ஏற்கனவே நம்ம சத்தம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது நினைவிருக்கா பாடல் ப்ரமோ வெளியாகி ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இருக்கும் பத்து தலையில் 8 தலைகள் பற்றிய விவரம் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. குமரிக்கண்டத்தில் ஏ ஜி ராவணன் கதாபாத்திரத்தில் மண்ணை ஆளும் மணல் மாஃபியா கூட்டத்தின் தலைவராக சிம்பு பத்து தல படத்தின் முதல் தலையாக நடித்திருக்கிறார்.

Also Read: கொல பசியில் பழைய பாணிக்கு திரும்பிய சிம்பு.. சர்ப்ரைஸ் ஆக கொடுத்த STR48 அப்டேட்

அவரை தொடர்ந்து இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து டிஜே அருணாச்சலம் இந்த படத்தில் மணல் மாஃபியா கூட்டத்தில் ஒருவராக மிரட்டுகிறார். இவர் ஏற்கனவே அசுரன் படத்தில் தனுஷின் முதல் மகனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் கலையரசனும் பத்து தலைகளில் ஒரு தலைவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் குக் வித் கோமாளி சந்தோஷ் , மனுஷிய புத்ரன் ஆகியோரும் முக்கிய தலைகளாக இணைந்துள்ளார்.

இந்த மணல் மாஃபியாவிற்கு எதிராக போராடும் அரசு அதிகாரியாக நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் மிரட்டுகிறார். இதில் இவருக்கு அறம் பட நயன்தாரா போன்ற கேரக்டர் கொடுத்திருக்கின்றனர். அதிலும் ட்ரெய்லரின் அதிவேகமாக வந்த மணல் லாரிகளின் முன்பு கொஞ்சம் கூட பயமில்லாமல் எதிர்த்து நிற்கும் பிரியா பவானி சங்கர் பத்து தல படத்தில் மிரட்டும் ஒரு தலையாக இருக்கிறார்.

Also Read: விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்

இவர்களுடன் இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இவரை டீசன்டான கெட்டப்பில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இதில் வெள்ளை வேட்டி சட்டையில் எல்லா பித்தலாட்டத்தையும் செய்யக்கூடிய அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.

இதில் நிச்சயம் கௌதம் வாசுதேவ் மேனனின் வித்தியாசமான நடிப்பை பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே விரைவில் ரிலீசாக இருக்கும் சிம்புவின் பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் 8 தலைகளின் விவரங்களை தெரிந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Also Read: என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

- Advertisement -spot_img

Trending News