ஸ்பெயின் பெண்ணுக்கு நடந்த கொடுமை.. நீதி கேட்டால் பணத்தை தூக்கி போட்ட கேவலம், இந்தியாவுக்கே வெட்கக்கேடு

Spain Woman-Jharkhand: ஒட்டு மொத்த இந்தியாவே தலைகுனியும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து சுற்றுலாவுக்கு வந்த பெண் தன் கணவர் முன்பே 7 பேர் கொண்ட கும்பலால் பலவந்தப்படுத்தப்பட்டிருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் மூன்று குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மீதும் உள்ள நான்கு பேரையும் கைது செய்து அனைவரையும் தூக்கிலிட விட வேண்டும் என தற்போது ஒட்டுமொத்த மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தை போலீஸ் தரப்பு மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன் மனைவிக்காக நீதி கேட்ட கணவனிடம் ஜார்கண்ட் அரசு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கியிருப்பது பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Also read: மனிதர்களை வேட்டையாடும் குரங்குகள்.. வானர ராஜாக்களின் Kingdom of the Planet of the Apes ட்ரெய்லர்

இதற்கு எதிராக மக்கள் தற்போது ஆவேசத்துடன் குரல் கொடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். நிச்சயம் இது ஒரு கேவலமான செயல்.

நம் நாட்டுக்கு வந்தவர்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்ததே பெரும் அவமானம். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு நீதியை வாங்கி தராமல் பணத்தை கொடுப்பது அதைவிட கேவலம் என குமுறும் மக்கள் வெளிநாட்டு தம்பதிகளிடம் மன்னிப்பு கேட்டு கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Also read: திரிஷாக்காக வரிந்து கட்டி வந்த சங்கம்.. உதயநிதிக்கு ஆதரவாகி விடுமோ? அச்சத்தில் வாய்மூடிய நடிகர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்