சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க

சூர்யா வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டார். விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்கள் சூர்யாவுக்கு உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை சூர்யா கூட்டி உள்ளார்.

அதில் தன்னுடைய ரசிகர்களிடம் இளைஞர்களுக்கு படிப்பு செலவு, மேற்படிப்புக்கு உதவுவது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த ரசிகர்கள் கூட்டத்தில் தன்னுடைய படத்தை பற்றியோ, அரசியலைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. சூர்யா மற்ற நடிகர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படியாக இந்த விஷயத்தை செய்துள்ளார்.

Also Read : சூர்யா பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜினி.. தேசிய விருதுக்காக போட்டிருக்கும் பலே திட்டம்

அதுமட்டும்இன்றி தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளுக்கு படிப்புக்கான செலவை ஏற்று செய்து வருகிறார். விஜய் சமீபத்தில் இரண்டு, மூன்று முறை தனது ரசிகர் கூட்டத்தை கூட்டு இருந்தார். அதில் தன்னுடைய படத்திற்கான விஷயத்தைக் காட்டிலும் அரசியலில் வருவதற்கான சில விஷயங்களை கூறியுள்ளார்.

மேலும் இப்போது விஜய் அரசியலில் வருவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாம். கட்சி ரீதியாகவும், தொகுதி வாரியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே விஜய் தனது ரசிகர்களை முன்னிறுத்தி செய்கிறார்.

Also Read : அஜித்தை பொருட்டாகவே மதிக்காத விஜய்யின் பேச்சு.. அமைதியாக கொடுக்கும் பதிலடி இதுதான்!

ஆனால் சூர்யா வருங்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும், அதற்கு முன்னரே இளைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருவது அனைவரது பாராட்டையும் பெற்று உள்ளது. அந்த வகையில் விஜய்யை பொறுத்தவரையில் தன்னுடைய சுயலாபத்திற்காக ரசிகர்களை கூட்டி உள்ளார்.

அதுவே சூர்யா தனக்கான தனி பானியை உருவாக்கி தன்னுடைய ரசிகர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என பல உதவிகளை செய்து வருகிறார். இப்போது சூர்யாவை பார்த்து விஜய் இதை கத்துக்கோங்க என சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : கமல், விக்ரம், சிவாஜி அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா சூர்யா? வெறித்தனமாக இறங்கும் சிவாவின் படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்