இதுக்கு லோகேஷ் பரவாயில்ல.. ஷங்கரால் படாத பாடுபடும் இந்தியன் 2 படக்குழு

Director Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பல வருடங்களாக ஏதோ பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு வழியாக ஜூலை முதல் வாரத்துடன் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் சம்பளம் கிட்டத்தட்ட 40 கோடியிலிருந்து 50 கோடி வரை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு புறம் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இந்தியன் 2 என மாறி மாறி ஷங்கர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முடிய உள்ளதால் ஓரளவு ஓய்வெடுக்க இருக்கிறார்.

Also Read : கமலுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்

இந்நிலையில் லோகேஷ் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு இந்தியன் 2 படக்குழுவை ஷங்கர் பாடாய்படுத்தி வருகிறாராம். அதாவது லோகேஷ் விஜய்யின் லியோ படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் எடுத்திருந்தார்.

இதனால் படக்குழு மிகுந்த சிரமத்தில் தான் படப்பிடிப்பை நடத்தி இருந்தனர். இப்போது இவரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு ஷங்கர் கடும் வெயிலில் இந்தியன் 2 படக்குழுவை வாட்டி வதைத்து வருகிறார். அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் கிட்டத்தட்ட 20 நாள் ஷூட்டிங் நடைபெற்று உள்ளது.

Also Read : சொதப்பிய நெல்சன், சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. லியோவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

அங்கு 48 டிகிரி வெயிலில் ஒரு பாடல் காட்சி படமாக்கி உள்ளனர். அதுவும் சித்தார்த்தை வைத்து அந்தப் பாடல் காட்சியை எடுத்துள்ளார் ஷங்கர். இவரின் படத்தில் உள்ள பாடல்கள் எப்போதுமே பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் சித்தார்தின் இந்த பாடலும் கண்டிப்பாக பெரிய அளவில் வரவேற்பு பெரும் என நம்பிக்கை அளித்துள்ளார்.

சினிமாவை பொருத்தவரையில் மழை, வெயில், குளிர் என அனைத்தும் பார்க்காமல் தான் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் படத்தின் பின்னணி வேலை செய்பவர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர், நடிகர், நடிகைகள் என பலரும் தான் அந்த சிரமகத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் ஷங்கரின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் அளிக்கிறதா என்பதை இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது என பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Also Read : இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் ஷங்கர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்