தியேட்டர்களுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு.. இனி அதுக்கு காசு வாங்கினா தப்பு

அன்றைய கால திரையரங்குகள் வெளிப்புறத்திலும், கூடாரத்திலும் அமைத்து ஒரு கிராமத்திலோ,ஊரிலோ உள்ள மக்கள் பார்க்கும் வண்ணம் கட்டமைக்கபட்டிற்கும். அப்போதெல்லாம் படத்தை பார்க்க வருபவர்கள் தங்களது வீட்டிலிருந்து தாங்கள் சாப்பிடும் உணவுகளை டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு வந்து குடும்பத்துடன் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படத்தை பார்த்துக்கொண்டே உணவுகளை சாப்பிடுவார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் திரையரங்குகளாக மாறி குறிப்பிட்ட நாற்காலிகளில் மட்டுமே மக்கள் அமர்ந்து சினிமாவை பார்த்தனர். அப்போது இடைவேளையின் போது, படம் பார்க்க வருபவர்கள் சாப்பிட ஏதுவாக திரையரங்குகளிலே விலை கொடுத்து உணவு வாங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் பார்க்க செல்வோர்களை விட தியேட்டரில் விற்கப்படும் உணவுப்பண்டங்களை வாங்கி சாப்பிடவே மக்கள் அதிக கூட்டம் கூடினார்கள்.

Also Read: படு மட்டமான நடந்துகொள்ளும் திரையரங்கு உரிமையாளர்கள்.. விஜய் இல்லைனா நீங்க ஒண்ணுமே இல்ல

இதுவே பல காலமாக மக்கள் பழகி வந்ததையடுத்து, தற்போதுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சற்று ஒரு படி மேல் போய் டிக்கெட் விலையை விட, அங்கு விற்கப்படும் உணவு விலையை அதிகரித்து வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பின்பு குடிக்கும் தண்ணீருக்கு கூட குறைந்தது 50 ருபாய் முதல் 200 ருபாய் வரை விற்று வசூலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் பார்க்க வருபவர்கள், வெளியிலிருந்து உணவுகளை கொண்டு வர ஆரம்பித்தார்கள். இதனால் தங்கள் வியாபாரம் கெடுவதை அறிந்த உரிமையாளர்கள் வெளி உணவுகள் திரையரங்கிற்குள் அனுமதி இல்லை என விதியாக்கினர். இதனிடையே திரையரங்குகளுக்கென சில புதிய விதிமுறைகளை உச்சநீதிமன்றம் நாடு முழுதும் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் விதித்துள்ளது.

Also Read: லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா

முதலாவதாக வெளி உணவுகளை திரையரங்கிற்குள் அனுமதிப்பதும், அனுமதிக்காததும் அந்ததந்த தியேட்டர் உரிமையாளர்களை பொறுத்ததே என தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இலவசமாகத்தான் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுடன் படம் பார்க்க வரும் பெற்றோர்கள், குழந்தைகளுக்காக வீட்டிலிருந்தே சமைத்த உணவுகளை தியேட்டரில் கொண்டு வர அனுமதி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புதிய விதிகளால் திரையரங்கு உரிமையாளர்கள் சற்று காண்டில் உள்ளார்களாம். தண்ணீரிலிருந்து குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்கிரீம் வரை விலையை இஷ்டத்துக்கு ஏற்றி வியாபாரம் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய விதிமுறைகளால் அவர்களின் வியாபாரம் பாதிக்கு பாதி குறையும் என வருத்தப்பட்டு வருகிறார்களாம்.

Also Read: நயன்தாரா படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. ஆஸ்கர் வாங்க விடமால் திரையரங்கு வைத்த செக்

- Advertisement -