மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் முதல் பாகம் நல்லபடியாக எடுக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸாகிறது. இதற்காக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதால் திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். மேலும் இந்த வாரம் முழுவதும், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோரின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது
இன்னும் இதில் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோரின் கேரக்டர் லுக் போஸ்டரும் வரிசையாக வெளியாகவுள்ளது
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை நடிக்க அப்போதிலிருந்து நடிகர்கள் ஆசையாக இருந்துள்ளனர். அதாவது அதுவும் கார்த்திக் நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பப்பட்டு உள்ளனர். அதாவது எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிக்க ஆசைப்பட்டு உள்ளார்.
இவரும் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியுள்ளார். அதேபோல் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக இருந்தால் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என கூறியுள்ளார். இவர்கள் மட்டுமல்ல தற்போது வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தியின் அண்ணன் சூர்யாவும் இந்த வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார்.
மேலும் இவர்களுடன் தளபதி விஜய்க்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டு, அந்த வாய்ப்பு கிடைக்குமா எனவும் எதிர்பார்த்து இருந்திருக்கிறார். எனவே இவ்வளவு போட்டிக்கு இடையில் அந்த கேரக்டர் கார்த்திக்கு தான் செட் ஆகும் என மணிரத்தினம் தெளிவாக முடிவெடுத்திருக்கிறார்.