கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த பிரபலம்.. இவர் நடிச்சாலும் நல்லாதான் இருந்திருக்கும்

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தளபதி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியான படங்களை எடுத்துப் பார்க்கையில் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் கில்லி. இப்படத்தில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படமாக அமைந்து இருந்தது. அதேபோல் இப்படத்தில் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய், த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக அடுத்தடுத்த படங்களில் இணையும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் கில்லி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போதும் கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் தவறாமல் பார்க்கும் ரசிகர்களும் உண்டு.

அப்பேர்ப்பட்ட கில்லி படத்தின் முதல் வாய்ப்பு விஜய்க்கு வரவில்லையாம். இப்படத்தின் இயக்குனர் தரணி முதலில் அஜித்தை கில்லி படத்தில் நடிக்க வைப்பதற்காக அணுகியுள்ளார். இப்படத்தின் கதையை கேட்ட அஜித் ஒரு சில காரணங்கள் சொல்லி இப்படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

அதன்பிறகுதான் தரணி விஜயிடம் சென்று கில்லி படத்தின் கதையை கூறியுள்ளார். உடனே விஜய்யும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். படம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாமல் தற்போதும் விஜய்யின் டாப் 10 படங்களில் கில்லி படமும் நிச்சயம் இடம்பெறும்.

ஆனால் தற்போது அஜித் ரசிகர்கள் இதை அறிந்த கில்லி படத்தில் அஜித் நடித்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருக்கும் என கூறிவருகிறார்கள். சினிமாவில் இது ஒரு சாதாரண விஷயம்தான். சில சமயங்களில் ஒரு சில காரணங்களால் சூப்பர் ஹிட் படங்களையும் தவறவிடும் சூழல் ஏற்படுகிறது.

Next Story

- Advertisement -