ரஜினி கமலை வளர்த்து விட்ட பிரபலம்.. உயிருக்கு போராடும் நிலையிலும் கண்டு கொள்ளவில்லை

ஹாலிவுட், பாலிவுட்  மற்றும் டோலிவுட் ஆகி நாடுகளில் சண்டை மாஸ்டராக இருந்தவர். முதலில் தமிழ் சினிமாவில் தாமரைக் குளம் படத்தில் நடிகர் எம் ஆர் ராதாவுக்கு டூப் போட்டிருக்கிறார். பிறகு மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவன் ஒருவன்’ தான் இவரை முதன்முதலாக ஸ்டண்ட் மாஸ்டராக மாற்றிய படம். இதில் வரும் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கி மிகுந்த வரவேற்பை இவருக்கு பெற்று கொடுத்தது.

இவர் ஆங்கில படம் உட்பட தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற 9 மொழி படங்களில் 1200க்கும் மேற்பட்ட படங்களை பணியாற்றியுள்ளார். மேலும் 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்ததன் மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, கமல் ரஜினி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் ஸ்டண்ட் பயிற்சி அளித்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்.

Also read: வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுத ஆசைப்பட்ட ரஜினி.. எழுதியதை கிழித்து தூக்கி எறிந்த கோபம்

தற்போது இவருடைய வயது 92. இவருடைய 90 வது வயதில் கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்டண்டு மாஸ்டர் ஜூடோ ரத்தினம்.இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சண்டை பயிற்சிகள் இன்று சினிமாவில் 20க்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பற்றி மிகவும் பேச வைத்தது.

இதுவரையில் ரஜினி 46 படங்களுக்கு ஜூடோ ரத்தினம் தான் சண்டை இயக்குனராக இருந்திருக்கிறார். கமலுக்கு சகலகலா வல்லவன் படம் உட்பட ஆறு படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஏற்ற மாதிரியாக சண்டை பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பாராம்.

Also read: ஜல்லிக்கட்டுக்காக ஆண்டவர் எடுத்துள்ள முடிவு.. மொத்த தமிழ்நாடு திரும்பி பார்க்க வைக்கும் சம்பவம்

இவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் இவரை இன்று வரை யாரும் சென்று பார்க்கவில்லை. அவரைப் பற்றி எந்த விஷயமும் கேட்கவில்லை. இவர் சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் குடியாத்தம் என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இவரால் வளர்ந்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் இவர்கள் கூட நலம் விசாரிக்காமல் இருக்கிறார்கள். ரஜினி, கமல் வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் மிக முக்கிய பங்காக அமைந்தது சண்டை காட்சிகள் தான். அதிலும் இவர்களுக்கு பதிலாக உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் செய்த கலைஞரே உயிருக்கு போராடிய நிலைமையிலும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

Also read: 45 வருஷமாக உடைக்க முடியாத ரஜினியின் சாதனை.. மிரண்டு போன திரையுலகம்

- Advertisement -spot_img

Trending News