ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டைட்டில் வின்னரை விரட்டியடித்த விஜய் டிவி.. ஆதரவோடு அனைத்து கொண்ட சன் டிவி

விஜய் டிவியில் மட்டும் சேர்ந்துவிட்டால் போதும் என்ற கனவோடு பலர் இருக்கின்றனர். ஏனென்றால் எப்படியும் அவர்களை பெரியாளாகி விடுவார்கள் என்ற எண்ணம்தான். மேலும் சிங்கிளாக வந்த பலர் விஜய் டிவியில் மூலம் ஒரே தொடர்களில் அல்லது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் காதலித்து திருமணமும் செய்துள்ளனர்.

அவ்வாறு பல பேரின் வாழ்க்கையில் விளக்கேத்தி உள்ளது விஜய் டிவி. ஆனால் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஒருவரை இந்த தொலைக்காட்சியில் நழுவவிட்டு உள்ளது. அதாவது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கனி.

அதிலும் காரக்குழம்பு கனி என்றால் அனைவருக்கும் சட்டென்று ஞாபகம் வரும். அதுமட்டுமல்லாமல் இவர் கலந்து கொண்ட அந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் கனி வென்றார். ஆனால் அதன்பிறகு விஜய்டிவி இவரை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 இல் விருந்தினராக மட்டும் பங்கு பெற்றார்.

தற்போது கனி ஒரு யூடியூப் சேனல் நடத்திவருகிறார். இதில் பொன்னியின் செல்வன் நாவலை ரசிகர்களுக்கு புரியும்படி கூறிவருகிறார். இதனால் இவரது யூடியூப் சேனலை பலர் பின்தொடர்கின்றனர். ஆரம்பத்தில் கனி பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

இதனால் கண்டிப்பாக விஜய் டிவியும் இவரைப் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்த்த நிலையில் எந்த வாய்ப்பும் கொடுக்காததால் தற்போது கனி சன் டிவிக்கு சென்றுள்ளார். அதாவது சன் டிவியில் புத்தம் புதிய சமையல் என்ற நிகழ்ச்சியை கனி தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கனி தற்போது ஒரு புதிய சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். டைட்டில் வின்னருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுக்காததை சன் டிவி சரியாக பயன்படுத்திக்கொண்டு கனிக்கு வாய்ப்பு கொடுத்து தன் வசம் இழுத்துள்ளது.

- Advertisement -

Trending News