ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

1M வியூஸ்களை கடந்த வீடியோ, கெஞ்சிய சிவகார்த்திகேயன்.. விடாமல் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்

Sivakarthikeyan-Blue Sattai Maaran: லியோ பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இமான், சிவகார்த்திகேயன் விவகாரம் தான் இப்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. அதிலும் இந்த விஷயத்தில் ப்ளூ சட்டை மாறன் மூக்கை நுழைத்து மாவீரனை ரக ரகமாக ட்ரோல் செய்து வருவது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இந்த சர்ச்சைக்கு பின்னணியில் சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பதை ப்ளூ சட்டை நக்கலாக ஒரு ட்வீட் மூலம் பதிவிட்டு இருக்கிறார். அதாவது இமான் பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே அது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி அது தொடர்பான பல கருத்துக்களும் வேகமாக பரவியது.

இதனால் சிவகார்த்திகேயன் சேர்த்து வைத்த மொத்த பெயரும் ஒரே நாளில் அதல பாதாளத்திற்கு சென்றது. அதிலும் பெண்கள் மத்தியில் அவருக்கு இருந்த மார்க்கெட் சர சரவென சரிய தொடங்கியது. இதனால் அவருடைய திரை வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி ஒட்டு மொத்த மீடியாவையும் பரபரப்பாகிய இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் நேரடியாக எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

ஆனால் மறைமுகமாக தன்னுடைய இணைய கூலிப்படையை வைத்து ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் அவர் இருந்ததாக பல பிரபலங்கள் ஓப்பன் ஆக தெரிவித்தனர். அதிலும் சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என கெஞ்சி கதறி இருக்கிறார்.

இதை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை, பேட்டியை நீக்க சொல்லி இசைமான் மற்றும் சம்பந்தப்பட்ட சேனலிடம் பலமுறை கெஞ்சிய மாவீரனின் பருப்பு வேகவில்லை. அந்த வீடியோ ஒரு மில்லியன் வியூஸ்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னடா இது குடும்பங்கள் கொண்டாடும் இளவரசனுக்கு வந்த சோதனை என அவர் கலாய்த்து தள்ளி உள்ளார்.

இதனால் பாவம் சிவகார்த்திகேயன் நிலைமை தான் படு மோசமாக இருக்கிறது. ஏற்கனவே பல பிரபலங்கள் இமான் கூறியது உண்மைதான் ஆதாரம் இருக்கிறது என பேசி அவருடைய வயிற்றில் புளியை கரைக்கின்றனர். இதில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு அவரை விடாமல் கலாய்த்து பங்கம் செய்து வருகிறார்.

- Advertisement -

Trending News