ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத சுத்த தங்கம்.. சிவகார்த்திகேயனின் முகத்திரையை கிழித்த ப்ளூ சட்டை

Blue Sattai to Sivakarthikeyan: தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக போய்க் கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம் தான். இவரா இந்த மாதிரி செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. அதாவது சினிமாவிற்குள் நுழைந்ததிலிருந்து இப்போது வரை அனைவருடைய மனதிலும் நம்ம வீட்டுப் பிள்ளையாக குடிப் புகுந்தவர்.

அப்படிப்பட்ட இவர் மீது இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிவகார்த்திகேயனின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது இமான் கூறிய விஷயம் தற்போது விவாத பொருளாக மாறிவிட்டது.

அத்துடன் சிவகார்த்திகேயனை குடும்பத்துடன் அனைவரும் கொண்டாடி வந்தார்கள். அப்படிப்பட்ட இவருடைய இமேஜுக்கு கடும் சேதாரம் ஆகிவிட்டதால் சிவகார்த்திகேயன் மறுநாளே சில கோடியை கொடுத்து பல மீடியாக்களின் வாயை அடைத்து இருக்கிறாராம். அந்த வகையில் சோசியல் மீடியாவிலும் இவருடைய ஐ.டி டீம் மூலமாக பல வீடியோக்களை தற்போது பப்ளிஷ் பண்ணி வருகிறார்.

அதில் சிவகார்த்திகேயன் எவ்வளவு நல்லவர் தெரியுமா? ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத சுத்த தங்கம். இவர் மேல பழி போடுவது ஆண்டவனுக்கே பொறுக்காது என பலரையும் பேச வச்சு அதை யூடியூபில் போட்டு இவர் பக்கம் எந்தத் தப்பும் இல்லாத மாதிரி மொத்த கதையும் திசை திருப்பி வருகிறாராம்.

அதாவது காசு பணம் இருந்தால் மொத்த பூசணிக்காவையும் சோத்துல வச்சு மறைக்கலாம் என்பதற்கு ஏற்ப சிவகார்த்திகேயன் ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறார். அந்த வகையில் இசைமான் மட்டும் யோக்கியமா? என்று மொத்த பழியையும் இமான் மீது போட்டு ஆட்டத்தையே கலைத்து வருகிறார்கள் சிவகார்த்திகேயனின் அல்லக்கைகள்.

ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க எத்தனை கோடி கொடுத்தாலும் எல்லாரையும் விலைக்கு வாங்கிட முடியாது. நீங்க செஞ்ச துரோகத்துக்கான பலனை அனுபவிச்சு தான் ஆகணும். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சிவகார்த்திகேயனின் முகத்திரையை ஒவ்வொரு நாளும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ப்ளூ சட்டை.

blue-sattai-to-sivakarthikeyan
blue-sattai-to-sivakarthikeyan